சவ்வரிசி கிச்சடி
| பரிமாறப்படும் வெப்பநிலை | காலை உணவு, சிற்றுண்டி |
|---|---|
| தொடங்கிய இடம் | இந்தியா |
| பகுதி | இந்தியாவின் பல பிராந்தியங்களில் |
| முக்கிய சேர்பொருட்கள் | மரவள்ளிக்கிழங்குமுத்துகள், உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, துருவல் தேங்காய், பச்சை மிளகாய், நெய் |
சவ்வரிசி கிச்சடி (Sabudana khichri) என்பது ஊறவைக்கப்பட்ட சவ்வரிசி மரவள்ளிக்கிழங்கு முத்துகள் கொண்டு செய்யப்படும் ஓர் இந்திய உணவாகும்.[1] சில சமயங்களில் 'கிச்சடி' என்றும் உச்சரிக்கப்படுகிறது. சிவராத்திரி, நவராத்திரி அல்லது அதுபோன்ற பிற இந்து சமய நிகழ்வுகளின் போது ஒருவர் விரதம் இருக்கும் வேளையில், விரத உணவாகத் தேர்ந்தெடுக்கப்படும் முதன்மையான உணவாக சவ்வரிசி கிச்சடி திகழ்கிறது.
பொதுவாக இந்தியாவின் மகாராட்டிரா, கருநாடகம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இராசத்தான், குசராத்து மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இவ்வுணவு தயாரிக்கப்படுகிறது. மும்பை, புனே, இந்தூர், போபால், செய்ப்பூர் மற்றும் நாக்பூர் போன்ற முக்கிய நகரங்களில், இது தெருவோர உணவாகக் கிடைப்பதுடன், ஆண்டு முழுவதும் மக்களால் பரவலாக உண்ணப்படுகிறது.[2]
செய்முறை
[தொகு]சவ்வரிசியை இரவோடு இரவாக நீரில் ஊறவைத்து, பின்னர் நீர் வடிக்கப்படுகிறது. சற்றுத் துகள்களாக அரைக்கப்பட்ட வேர்க்கடலை, கல் உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றுடன் நன்கு கலக்கப்படுகிறது. ஒரு வாணலியில் நெய் அல்லது எண்ணெய் சூடுபடுத்தப்படுகிறது. அதில் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய உருளைக்கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து, பின்னர் சவ்வரிசி-வேர்க்கடலை கலவையையும் சேர்த்து வதக்கப்படுகிறது. இந்தக் கிச்சடி சில நிமிடங்களுக்குச் சமைக்கப்பட்டு, பின்னர் பரிமாறப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hirway, Kanta. "Sabudana Khichdi (Maharashtrian Tapioca Pilaf) Recipe". NYT Cooking (New York Times). https://cooking.nytimes.com/recipes/1021372-sabudana-khichdi-maharashtrian-tapioca-pilaf.
- ↑ Kevin, Alex. "veg recipes". https://www.vegrecipesofindia.com/.
- ↑ Amit, Dassana (2023-02-28). "Perfect Sabudana Khichdi Recipe (For Fasting Or Vrat)". Dassana's Veg Recipes (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-12-30.