சவோகிர் சிந்தாரோவ்
| சவோகிர் சிந்தாரோவ் Javokhir Sindarov | |
|---|---|
2024 இல் சிந்தாரோவ் | |
| நாடு | உசுபெக்கிசுத்தான் |
| பிறப்பு | 8 திசம்பர் 2005 தாஷ்கந்து, உசுபெக்கிசுத்தான் |
| பட்டம் | கிராண்ட்மாசுட்டர் (2019) |
| பிடே தரவுகோள் | 2609 (திசம்பர் 2021) |
| உச்சத் தரவுகோள் | 2722 (சூலை 2025) |
| உச்சத் தரவரிசை | இல. 24 (செப்டம்பர் 2025) |
சவோகிர் சிந்தாரோவ் (Javokhir Sindarov; பிறப்பு: 8 திசம்பர் 2005) உசுபெக்கிசுத்தான் சதுரங்க கிராண்ட்மாசுட்டர். இவர் தனது 12-ஆவது அகவையில் (12 ஆண்டுகள், 10 மாதங்கள், 8 நாட்கள்) கிராண்ட்மாசுட்டர் ஆன ஒரு சதுரங்க மேதை ஆவார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சிந்தாரோவ் தாஷ்கந்து நகரில் 2005 திசம்பர் 8 இல் பிறந்தார்.[2] 2017 அக்டோபரில் இவருக்கு பன்னாட்டு மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.[3] தனது முதலாவது கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை 2018 சூனில் பெற்றார்.[4] அதே ஆண்டு செப்டம்பரில் இரண்டாவது கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை உலக இளையோர் சதுரங்க வாகைப் போட்டியில் பெற்று, தனது தரத்தை 2500 ஆக்கினார். 2018 அக்டோபரில், தனது மூன்றாவது கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை வென்று, வரலாற்றில் இரண்டாவது இளைய கிராண்ட்மாசுட்டரானார்.[1][4] இப்பட்டம் 2019 மார்ச்சில் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்டது.
2021 உலகக்கிண்ணப் போட்டியில், 121-ஆவது தரவரிசையில் இருந்தபோது, 8-ஆவது தரவரிசையில் இருந்த அலிரெசா பிரூஜாவை இரண்டாவது சுற்றில் தோற்கடித்தார்.[5][6]
2023 உலகக் கிண்ணப் போட்டியில், சிந்தாரோவ் 10-ஆவது தரவரிசையில் இருந்த மாக்சிம் வாச்சியர்-லாகிரேவை மூன்றாம் சுற்றில் தோற்கடித்தார்.[7]
தரவரிசையில் 16-ஆவதாக இருந்த சிந்தாரோவ், 2025 உலகக்கிண்ணப் போட்டியில் பிரடெரிக்கு சுவான், ஒசே மார்ட்டீனசு அல்காந்தரா ஆகியோரைத் தோற்கடித்து, அரையிறுதியில் தனது நாட்டினரான நோதிர்பெக் யாகுபோவுடன் விளையாடி, சமப்படுத்தலில் வென்றார். இறுதிப் போட்டியில், சீனாவின் வெய் யியை வென்று, 2025 உலகக்கிண்ணத்தைப் பெற்றார்.[8] இதன் மூலம், உலகக்கிண்னத்தை வென்ற முதல் உசுபெக் நாட்டவர், இளம் வயதில் உலகக் கிண்ணத்தை வென்றவர் (19 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்களில்) ஆகிய சாதனைகளுடன், 2026 வேட்பாளர் சுற்றில் விளையாடவும் தகுதி பெற்றார்.[9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Peterson, Macauley (18 October 2018). "Sindarov: second youngest GM ever". ChessBase. Archived from the original on 22 August 2025.
- ↑ "Certificate of Title Result: Grandmaster" (PDF). 21 June 2018. Archived (PDF) from the original on 24 November 2018.
- ↑ 88th FIDE Congress 2017, 7-15 October, Goynuk, Antalya, Turkey FIDE
- ↑ 4.0 4.1 Sindarov Likely Becomes 'New' 2nd-Youngest GM In History Chess.com
- ↑ "FIDE World Cup 2.3: Sindarov knocks out Firouzja". chess24.com (in ஆங்கிலம்). Retrieved 2021-07-18.
- ↑ "Tournament tree — FIDE World Cup 2021". worldcup-results.fide.com. Archived from the original on 12 August 2021. Retrieved 2021-07-20.
- ↑ "FIDE World Cup 2023: Preliminary lists of eligible players announced".
- ↑ "Tournament Bracket". 23 November 2025.
- ↑ McGourty (Colin_McGourty), Colin (2025-11-26). "Javokhir Sindarov Becomes Youngest Ever FIDE World Cup Winner". Chess.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-11-26.
- ↑ "Results & Standings - FIDE World Chess Cup 2025". Chess.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-11-26.
வெளி இணைப்புகள்
[தொகு]- சவோகிர் சிந்தாரோவ் rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
- சவோகிர் சிந்தாரோவ் player profile and games at Chessgames.com
