சவூதி அரேபியா-தாய்லாந்து உறவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சவூதி அரேபியா-தாய்லாந்து உறவுகள் (Saudi Arabia–Thailand relations) சவூதி அரேபியா மற்றும் தாய்லாந்து இடையே நிலவும் தற்போதைய மற்றும் வரலாற்று ரீதியான உறவுகளின் நிலையைப் பற்றி குறிப்பிடுகிறது. பாங்காக்கில் சவூதி அரேபியாவிற்கான ஒரு தூதகரமும், தாய்லாந்திற்கு ரியாத்தில் ஒரு தூதரகமும் உள்ளன. ஆனால் நாட்டின் தூதுவர் என்ற நிலையைவிட வெளியுறவுத்துறை பொறுப்பாளர் என்ற அளவிலேயே அப்பிரதிநிதித்துவம் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தாய்லாந்து நாட்டவர் வேலை வாய்ப்புக்காக சவூதி அரேபியாவிற்குச் சென்றனர்[1]. சவூதி அரேபியா மற்றும் தாய்லாந்து இடையே நிலவிய வரலாற்று நட்பு நீல வைரம் விவகாரத்தால் கனிசமான அளவுக்கு மோசமாகிவிட்டது.

நீல வைரம் விவகாரம்[தொகு]

தாய்லாந்து நாட்டுப் பணியாளர் கிரியங்கிரை தெக்கமோங், 1989 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா நாட்டு அரச குடும்பத்தினைச் சேர்ந்த நகைகள் மற்றும் மதிப்பு மிக்க நீல வைரங்களை [2]திருடியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து விரோத நிகழ்வுகள் தொடர்ச்சியாக தூண்டப்பட்டு வருகின்றன. சவுதி அரச குடும்பத்திற்கு நெருக்கமான சவூதி அரேபிய தொழிலதிபர் முகமது அல் உருவைலி[3], இவ்வழக்கு விசாரணைக்காக பாங்காக்கிற்கு பயணமானார். ஆனால், அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். மூன்று மாதங்களுக்குப் பின்னர், சவூதி அரேபியத் தூதரகத்திலிருந்து சென்ற மூன்று அதிகாரிகளும் பாங்காக்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இக்கொலைகள் இந்த நாள் வரையிலும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன[4] . பின்னாளில் திருடப்பட்ட திருட்டுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு சவூதி அரேபியாவிற்குக் கொண்டு வரப்பட்டன. ஆனால் அதில் மதிப்பு மிக்க நீல வைரங்களைக் காணவில்லை என்றும் திருப்பப்பட்ட நகைகளில் பாதிக்கு மேற்பட்டவை போலி நகைகள் [5][6] என்றும் சவூதி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரமே கடந்த 25 ஆண்டுகளாக சவூதி அரேபியா மற்றும் தாய்லாந்து இடையேயான உறவுகள் மோசமடைந்து வருவதற்கு காரணமாக இருக்கிறது.

இதனாலேயே தூதர் நிலையிலான அங்கீகாரம் பொறுப்பு அதிகாரி என்ற நிலைக்கு தரம் தாழ்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. திருட்டுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்த தாய்லாந்தினர் எண்ணிக்கை 2,00,000 பேர் என்ற நிலையில் இருந்து 10000 பேராக குறைந்து போனது. [1] சவூதி அரேபியாவில் இருந்து தாய்லாந்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான வணிக நடவடிக்கைள் என்ற சலுகை தேவைப்படுகிறது. தனிப்பட்ட நபர்களின் வணிக வருகைகள் என்றால் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் முறையான அங்கீகாரம் பெற்ற பிறகே வரவேண்டும். சுற்றுலாவுக்கக தாய்லாந்து செல்வது சவூதியில் அனுமதிக்கப்படுவதில்லை. தாய்லாந்திற்கு பயணம் சென்றவர்கள் சட்டத்தை மீறியவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீறுபவர்களுக்கு முன்னணி விசாரணை மூலம் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மெக்காவிற்கு புனிதப் பயணம் செய்யும் தாய்நாட்டு இசுலாம் யாத்திரிகர்களின் எண்ணிக்கை வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய சில ஆண்டுகளில், இருநாட்டு உறவுகள் சற்று சீரடையும் அறிகுறிகள் தெரிகின்றன. ஈரான் மற்றும் சவூதி அரேபியா இடையிலான வளைகுடாப் போட்டியில், தாய்லாந்தில் ஈரானின் செல்வாக்கு பெருகிவருவதற்கு இந்நீல வைரம் விவகாரம் அனுகூலமாகிப் போனதை சவுதி அரேபியா உணர்ந்துள்ளதாக ஐக்கிய அனைத்துலக பத்திரிகையாளர் பிராங்க் சி ஆண்டர்சன் ஒரு கோட்பாட்டையும் முன்வைக்கிறார்[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Time running out for thai-saudi relations". (sic)en severely strained Editorial. The Nation (Thailand). 9 April 2008. Retrieved 5 January 2012.
  2. Thailand's Blue Diamond Heist: Still a Sore Point
  3. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Thai cop convicted of Saudi gem theft". Television New Zealand. பார்த்த நாள் 21 September 2011.
  5. "The Thai police: A law unto themselves". The Economist. 2008-04-17. http://www.economist.com/node/11058580. பார்த்த நாள்: 14 Feb 2015. 
  6. "The Blue Diamond Affair". பார்த்த நாள் 14 Feb 2015.
  7. Frank G. Anderson. "Thailand revisits Saudi murder cases." Thai Traditions column from UPI Asia. 30 January 2009. Archived from the original on 5 January 2012.

.