சவூதி அரேபியாவின் சல்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சவூது
சவூதி அரேபியா மன்னர்
இரு புனித பள்ளிவாசல்களின் காப்பாளர்

சவூதி அரேபியா மன்னர்
ஆட்சிக்காலம் 23 சனவரி 2015 – நடப்பு
முன்னையவர் அப்துல்லா
அரச வாரிசு முக்ரின்
இளவரசர்
துணை பிரதமர்
பதவிக்காலம் 18 சூன் 2012 – 23 சனவரி 2015
முன்னையவர் நாயிஃப்
பின்னையவர் முக்ரின்
மன்னர் அப்துல்லா
பாதுகாப்பு அமைச்சர்
பதவிக்காலம் 2011, 5 நவம்பர் 5 முதல்
முன்னையவர் சுல்தான்
மன்னர் அப்துல்லா
ரியாத் மாகாண ஆளுநர்
பதவிக்காலம் 25 பெப்ரவரி 1963 – 5 நவம்பர் 2011
மன்னர்
முழுப்பெயர்
சல்மான் இப்னு அப்துல் றஹ்மான் இப்னு ஃபைஸல் இப்னு துர்க்கி இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு சஊது
குடும்பம் சவூது வம்சம்
தந்தை அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ்[1]
தாய் அசா இபின்ட் அகமது அல் சுடாய்ரி
சமயம் சலாஃபி இசுலாம்

சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சவூது (Salman bin Abdulaziz Al Saud, அரபு மொழி: سلمان بن عبدالعزيز آل سعود, Salmān bin ʿAbd al-ʿAzīz ʾĀl Saʿūd; பிறப்பு 31 திசம்பர் 1935) சவூதி அரேபியாவின் தற்போதைய மன்னரும் இரு புனித பள்ளிவாசல்களின் காப்பாளரும் சவூது வம்சத்தின் தலைவரும் ஆவார். தவிரவும் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சராக 2011 முதல் இருந்து வருகின்றார். 1963 முதல் 2011 வரை ரியாத் மாகாணத்தின் ஆளுநராகப் பொறுப்பாற்றியுள்ளார். சனவரி 23, 2015 அன்று தனது மாற்றாந்தம்பியும் மன்னருமான அப்துல்லாவின் மரணத்தை அடுத்து முடி சூடினார்.[2][3] 1982 முதல் 2005 வரை மன்னராக இருந்த ஃபாதின் உடன்பிறப்பாவார்.

இவரது மகனே அரபுலகின் முதலாவது விண்வெளி வீரராவார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Andelman, David A. (30 May 2012). "Letter From Arabia III: Paranoia, or We’re Surrounded!". World Policy Blog. http://www.worldpolicy.org/blog/2012/05/30/letter-arabia-iii-paranoia-or-we%E2%80%99re-surrounded. பார்த்த நாள்: 7 June 2012. 
  2. "King Abdullah, Who Nudged Saudi Arabia Forward, Dies at 90". பார்த்த நாள் 23 January 2015.
  3. "Saudi Arabia's King Abdullah dies". பார்த்த நாள் 23 January 2015.