சவுத் பின் சக்ர் அல் காசிமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவுத் பின் சக்ர் அல் காசிமி
Black-and-white right-facing profile portrait of a man wearing a Van dyke beard and a keffiyeh.
2010 ஆம் ஆண்டில் சேக் சவுத்
ராஃஸல் கைமா ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்27 அக்டோபர் 2010 – present 
முன்னையவர்சக்ர் பின் முகம்மத் அல் காசிமி
பிறப்பு10 பெப்ரவரி 1956 (1956-02-10) (அகவை 67)
துபாய், (தற்போதைய ஐக்கிய அரபு அமீரகம்
துணைவர்சேய்கா ஹனா பின்த் ஜுமா அல் மஜித்
மதம்இசுலாம்

சேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி (Saud bin Saqr Al Qasimi) (பிறப்பு: 1956 ஆண்டு பிப்ரவரி மாதம் 10) ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் ஒன்றான ரஃஸ் அல்-கைமா அமீரகத்தின் தற்போதைய ஆட்சியாளர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

சேக் சவுத் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 அன்று துபாயில் பிறந்தார். இவர் சேக் சக்ர் பின் முகம்மத் அல் காசிமியின் நான்காவது மகன் ஆவார். இவரது தந்தை ரஃஸ் அல் கைமாவின் ஆட்சியாளராகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர் குழு உறுப்பினராகவும் இருந்தார், இவரது தந்தை 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று இறந்தார்.

இவர் தனது முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வியை ரஃஸ் அல் கைமாவில் முடித்தார். பின்னர் 1973 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் அமெரிக்க பெய்ரூட் பல்கலைக்கழகத்தில் (AUB) பொருளாதாரம் படித்தார். 1975 இல் பெய்ரூட்டில் லெபனான் உள்நாட்டுப் போர் வெடித்தபோது, சேக் சவுத் மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு இவர் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

சேக் சவுத் ஜான் சம்பர்சுடன் (சிஸ்கோ சிஸ்டம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி)

1979 ஆம் ஆண்டில் ரஃஸ் அல் கைமா சேக் சவுத் திரும்பிய பிறகு தந்தையின் நிர்வாகத்தில் துணைபுரிவதில் ஈடுப்பட்டார். இவர் நீதிமன்றத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டார். பின் இவர் ரஃஸ் அல் கைமாவின் இளவரசராகவும், துணை ஆட்சியாளராகவும் ஆனார். இவரது தந்தை சேக் சக்ர் பின் முகம்மத் அல் காசிமி, தனது மூத்த சகோதரரான சேக் காலித் பின் சக்ர் அல் காசிமியை எதிர்பாராத விதமாக 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14, அன்று அமெரிக்கத் தலைமையிலான ஈராக் மீதான படையெடுப்பு (2003)க்கு விரோதமாக நடந்து கொண்டதற்காக பதவி நீக்கம் செய்யப்பாட்டார். ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி அமீரகமான அபுதாபி, இந்த பதவி நீக்கம் நடவடிக்கைக்கு அனுமதி அளித்ததுடன், ரஃஸ் அல் கைமாவுக்கு கவச வாகனங்களை அனுப்பி சேக் சவுத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியது.[1] 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று, 62 ஆண்டுகளாக ரஃஸ் அல் கைமாவை ஆண்ட இவரது தந்தை சேக் சக்ர் பின் முகம்மத் அல் காசிமி இறந்தவுடன், சேக் சவுத் அதிகாரப்பூர்வமாக ரஃஸ் அல் கைமாவின்ஆட்சியாளரானார் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு உறுப்பினர்களின் கூட்டமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சேக் சவுத் சேய்கா ஹனா பின்த் ஜுமா அல் மஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். [2] இவர்களுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். [3] அவர்களின் பெயர்கள் சேக் முகம்மத் (பட்டத்து இளவரசர்), செய்கா அம்னா (ராக் முதலீடு மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தலைவர்), சேக் அகமது ( [4] ஆர்.ஏ.கே பெட்ரோலிய ஆணையத்தின் தலைவர், [5]அல் ராம்ஸ் விளையாட்டு மற்றும் கலாச்சார குழுவின் தலைவர்), சேக் காலித் (அல் மர்ஜன் தீவின் தலைவர் மற்றும் ஆர்.ஏ.கே முதலீட்டு மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் துணைத் தலைவர்), சேக் சக்ர் மற்றும் சேய்கா மஹ்ரா. [6] [7]

குறிப்புகள்[தொகு]

 

  1. "Succession Politics in the Conservative Arab Gulf States". www.washingtoninstitute.org.
  2. "Netty Royal". www.nettyroyal.nl. 2021-06-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-13 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Netty Royal". www.nettyroyal.nl. 2021-06-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-13 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Meet Our Board". RAK Hospitality Holding.
  5. "Leadership". RAK Petroleum Authority.
  6. "IDO Board of Directors". RAK IDO.
  7. "A Word from the Chairman". Al Marjan Island. 2018-11-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-13 அன்று பார்க்கப்பட்டது.