சவுக்கு (சாட்டை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு வகை நேரான சவுக்கு
ஒன்பது வால்கள் கொண்ட சவுக்கின் படம் ஓர் அமெரிக்க டாலர் பில் அளவு ஒப்பீடு.
ரொமாண்டின் ஒரு தொகுப்பு, ரொமாண்டின் இறுதியில் இரட்டைச் சாட்டை உள்ளது

சவுக்கு அல்லது சாட்டை (whip) என்பது ஒரு கருவி ஆகும். இது பாரம்பரியமாக விலங்குகள் அல்லது மக்களை அச்சுறுத்தி வழிபடுத்த, கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியாகும். இதனால் ஏற்படும் வலி அல்லது வலி குறித்து பயத்தை ஏற்படுத்தி, சில செயல்களை சாட்டையைப் பயன்படுத்தாமலே செய்விக்க பயன்படுத்தப்படுகிறது. குதிரையேற்றத்தின்போது வலி போன்ற கூடுதல் அழுத்தம் தந்து குதிரையை விரைவாக ஒட்டவோ அல்லது திசை திருப்பவோ பயன்படுத்தப்படுகிறது. சாட்டைகள் பொதுவாக இரண்டு வகையானவையாக, ஒரு குச்சிபோல நீளமான தொடரச்சியுடன் வடிவமைக்கப்பட்டதாக அல்லது ஒரு கைப்பிடியை அடுத்து நெகிழ்வான ஊசலாடும் நெகிழ்வான தன்மை கொண்டதாக இருக்கும், ஆனால் அதிக துல்லியமான மற்றும் கூடுதலான சக்தியைக் கொண்டிருக்கிறது, இருப்பினும் குறைவான துல்லியமானதாக இருக்கலாம்.

பெரும்பாலான சாட்டைகள் விலங்குகளின் மீது பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை என்றாலும், சாட்டையின் முனையில் ஒன்பது சிறிய வால்கள் போன்ற நீட்சிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்ட சவுக்கானது, மனிதருக்கு உடல் ரீதியான தண்டனை அல்லது சித்திரவதையை அளிக்கும் நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. சில மத நடைமுறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை விலங்குளின் மீது பயன்படுத்தப்படுவதை விலங்கு வன்கொடுமையாகவும், மற்றும் மனிதர்கள் மீது பயன்படுத்தப்படுவது தாக்குதலாகவும் கருதப்படலாம்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுக்கு_(சாட்டை)&oldid=3418993" இருந்து மீள்விக்கப்பட்டது