சவலாப்பேரி சாஸ்தா வேலாயுதப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு சாஸ்தா வேலாயுதப் பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:சங்கரப்பேரி ரோடு, சவலாப்பேரி, கோவில்பட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கோவில்பட்டி
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
மூலவர்:விநாயகர், பெருமாள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

சவலாப்பேரி சாஸ்தா வேலாயுதப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

== கோயில் அமைப்பு ==தூத்துக்குடி மாவட்டம் தற்போதைய கயத்தார் (கசத்தாறு)தாலுக்கா சவலாப்பேரி கிராமத்தின் மேற்கே ஊரின் எல்லையில் ஊர் காக்கும் எல்லை சாமியாக கம்பீர தோற்றத்துடன் வெள்ளை குதிரையில் அய்யனாரும்;கருப்பசாமியும் வீற்றிருக்கின்றனர். இக்கோவிலின் தனிச் சிறப்பாக கோவில் ஸ்தல விருட்சமரமாக ருத்திராட்சை மரம் உள்ளது. ருத்திராட்சம்மரம் பெரும்பாலும் இடங்களில் காணப்படுவது இல்லை.ருத்திராட்சம் ஆனது சிவனின் நெற்றி கண்ணில் இருந்து உருவானதால் சிவனின் பரிபூரண அருளும் சித்தர்கள் வாழ்ந்த இடங்களில் மட்டுமே ருத்திராட்சம் மரம் அமையப் பெற்றிருக்கும்.மேலும் இவ்வூரில் இக்கோவிலில் ருத்திராட்சம் மரம் அமையப்பெற்று இருப்பது தனி சிறப்பு. இக்கோவிலின் திருவிழா மாசி மாதம் வரும் மாகா சிவராத்திரி அன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் விநாயகர்,சாஸ்தா;புர்ன புஷ்கலா; கருப்பசாமி;பேச்சியம்மன்; மாடசாமி, பெருமாள் சன்னதிகள் உள்ளன. மேலும் இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)