சவரக்கத்தி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவரக்கத்தி (திரைப்படம்)
இயக்கம்ஜி. ஆர் . ஆதித்யா
தயாரிப்புமிஷ்கின்
கதைமிஷ்கின்
இசைஅரோள் கரோலி
நடிப்புராம்
ராமசுப்ரமணியம்
பூர்ணா
ஒளிப்பதிவுகார்த்திக் வெங்கட்ராமன்
படத்தொகுப்புசதீஷ் குமார்
வெளியீடு9 பிப்ரவரி 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சவரக்கத்தி (Savarakathi) ஜி. ஆர் . ஆதித்யா இயக்கத்தில், மிஷ்கின் தயாரிப்பில், ராம், மிஷ்கின், பூர்ணா ஆகியோரின் முன்னணி கதைப்பாத்திர நடிப்பில் வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் அரோள் கரோலின் இசையில், கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவில், சதீஷ் குமாரின் படத்தொகுப்பில் 9 பிப்ரவரி, 2018 அன்று வெளியாகியுள்ளது.

நடிப்பு[தொகு]

  • ராம்- பிச்சைமூர்த்தியாக
  • மிஷ்கின்- மங்கேஸ்வரனாக
  • பூர்ணா- சுபத்திராவாக
  • ஷாஜி சென்- மனநலம் பாதிக்கப்பட்டவராக

இசை[தொகு]

இப்படத்தில் பாடல்களுக்கான இசையையும், பின்னணி இசையையும் அரோள் கரோலின் மேற்கொண்டு வருகின்றார். இத்திரைப்படத்தின் பாடல்களை தமிழச்சி தங்கப்பாண்டியன், மிஷ்கின் ஆகியோர் எழுதியுள்ளனர்

திரைப்படப்பணிகள்[தொகு]

மிஷ்கின் இத்திரைப்படத்தின் பணிகளை 2015இல் தொடங்கினார். முடித்திருத்தும் பணியில் உள்ள தனக்குத்தெரிந்த ஒருவரின் உண்மைக்கதை என்று தெரிவித்துள்ளார்.[1][2] இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜி. ஆர் . ஆதித்யா, மிஷ்கினின் சகோதரர், இவர் பார்த்திபனிடம் பணியாற்றி உள்ளார். இத்திரைப்படத்தில் நடித்துள்ள ராம் முதலில் இப்படத்தில் நடிக்க மறுத்தார், பின்னர் நடிக்க ஒப்புக்காண்டார்.[3][4]

சான்றுகள்[தொகு]

  1. http://www.thehindu.com/entertainment/movies/director-mysskin-talks-about-his-love-for-sherlock-holmes-and-portrayal-of-private-detective-in-thupparivalan/article19762616.ece
  2. "Suriya Thanked Me for My Heartfelt Work". Behindwoods. 24 October 2015. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-15/music-director-arrol-corelli-on-his-work-in-pasanga-2.html.  Retrieved 31 December 2015.
  3. http://www.thehindu.com/entertainment/movies/A-comical-collision/article16374414.ece
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-03. பார்க்கப்பட்ட நாள் 2018-02-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவரக்கத்தி_(திரைப்படம்)&oldid=3537671" இலிருந்து மீள்விக்கப்பட்டது