சவரக்கத்தி மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவரக்கத்தி மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. strigatus
இருசொற் பெயரீடு
Aeoliscus strigatus
(Günther, 1861)[1]

சவரக்கத்தி மீன் விலங்கியல் பெயர் அயோலிஸ்கஸ் ஸ்ட்ரிகேட்டஸ் (Aeoliscus strigatus) ஆகும் . இந்த மீன் சிங்க்நேத்திபோர்ம்ஸ் எனப்படும் துறையினை சார்ந்தது. இந்த மீன் சென்ட்ரிஸிடே குடும்பத்தினையும் சென்றிசினே துணைக்குடும்பத்தினையும் சார்ந்தது .

உடலமைப்பு[தொகு]

சவரக்கத்தி மீன்கள் நீண்ட குறுகிய உடலமைப்பை பெற்றுள்ளன. இந்த மீன் 15 செமீ (5.9 அங்குலம்) நீளம் உடைய ஒரு சிறிய மீன் ஆகும். இந்த சவரக்கத்தி மீன் தலைகீழ் இடம்பெயர்வு என்ற சிறப்புப் பண்பினை பெற்றுள்ளது. அதாவது நீரின் அடிப்பக்கத்தை நோக்கி மீனின் தலை இருப்பது போல இடம்பெயர்தல் ஆகும்.

வாழிடம்[தொகு]

சவரக்கத்தி மீன் கடற்புற்கள் மற்றும் பவளப்பாறைகளின் ஊடே பொதுவாக காணப்படும். மேலும், கடல் முள்ளெலி காணப்படும் இடங்களில் அதன் ஊடே காணப்படுகிறது.

உணவூட்டம்[தொகு]

சவரக்கத்தி மீன் சிறிய இறால் மற்றும் சிறிய முதுகெலும்பிகள் ஆகியனவற்றை முக்கிய உணவாக எடுத்துக் கொள்கின்றன. இந்த மீன் மிதவைப் பிராணிகளினையும் உணவாக உட்கொள்கின்றன. கடல் முள்ளெலி மற்ற விலங்கினங்களால் தாக்கப்படும் பொழுது இந்த சவரக்கத்தி மீன் அதன் முட்களிகளில் ஒளிந்து சிறிய உயிரினங்களை உண்டு வாழ்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

1. Fish portal ITIS Standard Report Page: Aeoliscus strigatus 2. Ecology Summary - Aeoliscus strigatus 3. Kuiter, Rudie.Seahorses and their relatives.Aquatic Photographics,2009,p304.ISBN 9780977537211 4. Ewald Lieske & Robert Myers. Coral reef fishes. Princeton Univiversity Press,1995, p 15. ISBN 0691004811 5.Aeoliscus strigatus - Jointed Razorfish - Discover Life

  1. ITIS Standard Report Page: Aeoliscus strigatus
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவரக்கத்தி_மீன்&oldid=3934914" இலிருந்து மீள்விக்கப்பட்டது