சல்லியக்கிரியை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சல்லியக்கிரியை என்பது பண்டைய இந்திய மருத்துவ முறைகளுள் ஒன்றாகும். அதாவது சோழர் காலத்தில் ஆலயங்களை அண்டியிருந்த மருத்துவ மனைகளில் இம் முறை காணப்பட்டது. இது கட்டிகள் முதலானவற்றை அறுத்து குணப்படுத்தும் மருத்துவ முறையாகும்.[1] இன்றைய சத்திரசிகிச்சைக்கு ஒப்பானது. இன்றைய காலம் போன்றே அன்றைய காலத்திலும் மருத்துவ மனைகளில் வெவ்வேறு துறை சார்ந்த இரு மருத்துவர்கள் காணப்பட்டதாக அறியலாம். ஒருவர் கைநாடி பிடித்து மருந்து கொடுப்பவர். மற்றையவர் சல்லியக்கிரியை பண்ணுபவர்.

இராஜேந்திர சோழனின் திருமுக்கூடல் மெய்க்கீர்த்தி இச் சல்லியக்கிரியை செய்வோனுக்கு வழங்கப்பட்ட நிவந்தங்கள் பற்றிக் கூறுகின்றது. "...சல்லியக்கிரியை பண்ணுவானுக்கு நாளொன்றுக்கு நெல் குறுணியும் ஆதுலர்க்கு மருந்துகளுக்கு வேண்டும் மருந்து பறித்து விறகிட்டு பரியாரம் பண்ணுவரிருவருக்கு நாளொன்றுக்கு நெல் குறுணியாக நெல்பதக்கும் காசொன்றாக காசிரண்டும்...........இக்காசு பத்ராவிடில் காசொன்றுக்கு தண்டவாணி ஒன்றோடொக்கும் பொன்காசு நிறைகால் இடுவதாகவும் இப்படியாண்டு ஆறாவது நிபந்தம் செய்தபடி இந்நிபந்தம் தழுவக்குழைந்தானான அபிமானபேரு பிரம்ம மாராயன்"[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோவில் தலங்கள் மற்றும் ஆன்மிக கட்டுரைகள்". Archived from the original on 2013-12-14. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2014.
  2. "இராசேந்திரசோழன் மெய்கீர்த்தி". பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்லியக்கிரியை&oldid=3553150" இலிருந்து மீள்விக்கப்பட்டது