உள்ளடக்கத்துக்குச் செல்

சல்போகொழுமியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சல்போகுயினோவோசில் டையசில்கிளிசரால் சல்போகுயினோவோசில் சேர்ம வகையான டைசிடிராயில்கிளிசராலின் வேதியியல் கட்டமைப்பு

சல்போகொழுமியங்கள் (Sulfolipids) என்பவை கந்தகமுள்ள வேதி வினைக்குழு கொழுமிய வகையாகும். சல்போகுயினோவோசில் டையசில்கிளிசரால் எனப்படும் சல்போகொழுமியம் புவியில் அதிக அளவில் காணப்படுகிறது. சல்போகுயினோவோசு மற்றும் டையசில்கிளிசராலின் கிளைகோசைடுகளால் இச்சேர்மம் ஆக்கப்பட்டுள்ளது. தாவரங்களில் கந்தகச் சுழற்சிக்கு சல்போகுயினோவோசில் டைகிளிசரைடுகள் முக்கியமான கூறுகளாக செயல்படுகின்றன[1]. சல்பாடைடு மற்றும் செமினோகொழுமியம் உள்ளிட்டவை பிற முக்கியமான சல்பாடைடுகளாகும். இவை ஒவ்வொன்றும் சல்பேட்டு ஏறிய கிளைக்கோகொழுமியங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Harwood, John L.; Nicholls, Rodney G. (1979). "The plant sulfolipid. A major component of the sulfur cycle". Biochemical Society Transactions 7 (2): 440–7. doi:10.1042/bst0070440. பப்மெட்:428677. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்போகொழுமியம்&oldid=2398436" இலிருந்து மீள்விக்கப்பட்டது