சல்தோரோ மலைகள்
தோற்றம்

சல்தோரோ மலைகள் (Saltoro Mountains), காரகோரம் மலைத்தொடரின் ஒரு கிளை ஆகும். இது லடாக் பிரதேசத்தில் உள்ளது.[1][2] இது காரகோரத்திற்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. சியாச்சின் மலைகளுக்கு தென்மேற்கில் உள்ளது. இது இந்தியாவின் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பிரிக்கிறது. இம்மலையின் மேற்கில் உள்ள பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சல்தோரோ சமவெளி உள்ளது.
இம்மலையின் கொடுமுடி 7742 மீட்டர் உயரத்தில் உள்ளது. இம்மலையில் சல்தொரோ ஆறு மற்றும் சல்தோரோ பள்ளத்தாக்கு உள்ளது. இம்மலையின் சியாச்சின் கொடிமுடி மற்றும் கணவாய்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டிலும்; இதன் கீழ் பகுதி மற்றும் மேற்கு பகுதிகள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலும் உள்ளது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tryst With Deceit?". outlookindia.com/.
- ↑ Mason, Kenneth (1938). "Karakoram Nomenclature". Himalayan Journal 10. Archived from the original on 2013-10-12. Retrieved 2014-02-10.
- ↑ How India realised it was at risk of losing the Siachen glacier to Pakistan, The Print, 12 April 2018.
ஆதாரம்
[தொகு]- Jerzy Wala, Geographical Sketch Map of the Karakoram, Swiss Foundation for Alpine Research, Zurich, 1990.