சலோங்கா தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சலோங்கா தேசியப் பூங்கா
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைஇயற்கை
ஒப்பளவுvii, x
உசாத்துணை280
UNESCO regionஆபிரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1984 (8ஆவது தொடர்)
ஆபத்தான நிலை1999-

சலோங்கா தேசியப் பூங்கா, கொங்கோ ஜனநாயகக் குடியரசில், கொங்கோ ஆற்று வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். இது ஆபிரிக்காவின் மிகப் பெரிய வெப்பவலய மழைக்காடு ஆகும். இங்கே பொனோபோஸ், சலோங்கா, குரங்குகள், ஸயர் மயில்கள், காட்டு யானைகள், ஆபிரிக்க முதலைகள் என்பன காணப்படுகின்றன. இது 1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பதியப்பட்டுள்ளது. கொங்கோவின் கிழக்குப் பகுதியில் நடைபெறும் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து 1999 இல் இது ஆபத்துக்கு உட்பட்டுள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.