சலே முகமது அல்லாதீன்

சலே முகமது அல்லாதீன் (Saleh Muhammad Alladin) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வானியலாளர் ஆவார். 1931 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். முனைவர் அபீசு சலே முகமது அல்லாதீன் என்ற பெயராலும் அறியப்படுகிறார். அகமதியா இசுலாமிய சீர்திருத்த இயக்கத்தைச் சேர்ந்தவராக இயங்கினார். அல்லாதீன் 1963 ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] உலகின் மிகவும் பிரபலமான 100 வானியலாளர்களில் ஒருவராகவும், இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் கல்வி ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். பல புத்தகங்கள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள உசுமானிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் மற்றும் வானியல் மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் இருந்துள்ளார்.[2][3] பன்னாட்டு வானியல் ஒன்றியம், இந்திய வானியல் சங்கம், இந்திய பிளாசுமா அறிவியல் சங்கம், பொது சார்பியல் மற்றும் இந்திய இயற்பியல் ஆசிரியர்கள் சங்கம் போன்ற பல அறிவியல் சங்கங்களில் இவர் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார்.[1]
1984 ஆம் ஆண்டு சூரிய மற்றும் சந்திர கிரகணம்
[தொகு]இரமலான் மாதத்தில் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஒவ்வொரு 22 வருடங்களுக்கும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிகழும் என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றும், காதியன் நகரத்தின் மீது கடைசியாக சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் 600 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தன என்றும் அல்லாதீன் சுட்டிக் காட்டினார்.[4]
மதம்
[தொகு]அல்லாதீனின் தாத்தா சேத் அப்துல்லா அலாதீன் அகமதிய இசுலாமிய சமயத்தில் இணைந்த குடும்பத்தின் முதல் நபராவார். தனது செல்வத்தின் பெரும்பகுதியை இவர் இசுலாம் சமயத்தின் வளர்ச்சிக்காக அர்பணித்தார். கலீபத்துல் மசீக் வி மிர்சா மசூரூர் அகமதுவின் கீழ் இந்தியாவில் அகமதிய இசுலாம் சமாத்தின் மிக உயர்ந்த அமைப்பான சதார் அஞ்சுமன் அகமதியாவின் தலைவராக 4 ஆண்டுகள் இருந்தார். மிர்சா மசுரூர் அகமது அவரை உலுவ் அல்பாப் என்று அழைத்தார். அதாவது புாிதல் திறமை பெற்றவர்களில் ஒருவர் என்பது இதன் பொருளாகும்.[4].[5]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]அல்லாதீன் இந்தியாவின் ஐதராபாத்தில் பிறந்தார். அவருக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக 2011 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 ஆம் தேதியன்று காலமானார்.[2]
விருதுகள்
[தொகு]- மேகநாத் சாகா விருது பல்கலைக் கழக மானியக் குழு புது டெல்லி 1981
- பாரத் சிறப்பு விருது
- இந்திய நட்பு மன்றம்[4]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Hafiz Saleh Muhammad Alladin Biography, Hafiz Saleh Muhammad Alladin Bio, Hafiz Saleh Muhammad Alladin Photos, Videos, Wallpapers, News". Archived from the original on 2012-07-08. Retrieved 2011-03-29.
- 1 2 "Educational advisor to Kalam dies in Amritsar". The Indian Express (in ஆங்கிலம்). 2011-03-22. Retrieved 2024-10-13.
- ↑ "[UPDATE] Abdul Kalam (Dr Hafiz Saleh Muhammad Alladin) Died, Not APJ Abdul Kalam | Breaking News". www.myvisitingcard.com. Archived from the original on 2011-03-25.
- 1 2 3 Virk, Zakaria. Astronomer, Dr. Hafiz Muhammad Alladin (1931-2011). Ahmadiyya Gazette Canada. p. 24.
- ↑ Friday Sermon Khalifartul Masih V, Al Fazl, London 15 April 2011.