சலுகைசார் முதலாளியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சலுகைசார் முதலாளியம் (CRONY CAPITALISM) என்பது அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகள், அரசு எந்திரம் போன்ற அதிகாரம் படைத்தோருடன் தொழிலதிபர்களும் பெருஞ் செல்வந்தர்களும் கள்ளத்தொடர்பு கொண்டு, சலுகைகள் பெற்று தத்தம் வளங்களைப் பெருக்கிக் கொள்ளும் நிலைமையைக் குறிக்கும் பொருளாதாரக் கருதுகோள் ஆகும்.

அடையாளங்கள்[தொகு]

வரி விலக்குகள், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கிக்கடன்கள் அளித்தல், உரிமங்கள் வழங்குதல், அரசுக்குச் சொந்தமான நிலங்கள், இயற்கை வளங்கள், கனிம வளங்கள், நிலக்கரி, மணல் ஆகியவற்றை முறை தவறி எடுத்து விற்பனை செய்தல் போன்றனவற்றை அனுமதித்தல் சலுகைசார் முதலாளியம் என்னும் பொருளியல் அமைப்பில் நடக்கின்றன.

நிகழ்வுகள்[தொகு]

1997 இல் ஏற்பட்ட ஆசிய பொருளாதாரச் சிக்கலின் போது இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் சலுகைசார் முதலாளியம் என்னும் கேட்டினால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வறுமை ஏற்பட்டது. அண்மைக் காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட முறைகேடுகளான , நிலக்கரி சுரங்க ஊழல், மட்டைப் பந்தாட்ட வாரிய ஊழல், பொதுத் துறை வங்கிகளில் வாராக் கடன்களின் பெருக்கம், கிங் பிசர், ஸ்பைஸ் ஜெட் குழுமங்களின் இழப்புகள் ஆகியன சலுகைசார் முதலாளியத்தினால் ஏற்பட்ட பின்னடைவுகள் என்று பொருளியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்

கருத்துகள்[தொகு]

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராசன், தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக இருந்த வினோத் ராய் போன்றோர் சலுகைசார் முதலாளியம் நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு நல்லது இல்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெற்ற அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்சு என்பவரும் "சலுகைசார் முதலாளியம் பொருளாதாரத்தைச் சேதப்படுத்துவதோடு அல்லாமல் சனநாயக அரசியலையும் நாசப்படுத்துகிறது" என்று சொல்லியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

http://www.thehindu.com/business/Economy/crony-capitalism-hampers-economic-growth/article6305270.ece

http://www.thehindu.com/news/national/crony-capitalism-running-india-quraishi/article6713742.ece

http://www.theguardian.com/commentisfree/2012/nov/12/india-wants-more-than-crony-capitalism

http://www.mainstreamweekly.net/article5480.html

https://mises.org/blog/joseph-stiglitz-crony-capitalism