சலீம் மாலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சலீம் மலிக்
பாக்கித்தான் பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் சலீம் மலிக்
பிறப்பு 16 ஏப்ரல் 1963 (1963-04-16) (அகவை 56)
லாகூர், பாக்கித்தான்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 90) மார்ச்சு 5, 1982: எ இலங்கை
கடைசித் தேர்வு பிப்ரவரி 20, 1999: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 38) சனவரி 12, 1982: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி சூன் 8, 1999:  எ இந்தியா
சட்டை இல. 3
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்தரஏ-தர
ஆட்டங்கள் 103 283 269 426
ஓட்டங்கள் 5,768 7,170 16,586 11,856
துடுப்பாட்ட சராசரி 43.69 32.88 45.94 36.59
100கள்/50கள் 15/29 5/47 43/81 12/78
அதிக ஓட்டங்கள் 237 102 237 138
பந்து வீச்சுகள் 734 3,505 5,784 5,745
இலக்குகள் 5 89 93 160
பந்துவீச்சு சராசரி 82.80 33.24 35.30 29.35
சுற்றில் 5 இலக்குகள் 0 1 4 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/3 5/35 5/19 5/35
பிடிகள்/ஸ்டம்புகள் 65/– 81/– 167/– 141/–

பிப்ரவரி 8, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

சலீம் மலிக் (Saleem Malik, பிறப்பு: ஏப்ரல் 16 1963,முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 103 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 283 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1982 இலிருந்து 1999வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1993இல் கடமையாற்றியுள்ளார். வலதுகை மட்டையாளரான இவர் வலது கை மித வேகப் பந்துவீச்சாளரும் ஆவார். இவர் பாக்கித்தான் தேசிய அணி எசெக்ஸ், ஹபிப் வங்கி அணி, லாகூர் மற்றும் சர்கோதா ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவருக்கு சிலிம் எனும் புனைப்பெயர் உள்ளது.

சர்வதேச போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

1982 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .மார்ச் 5, கராச்சியில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் மட்டையாட்டத்தில் 55 பந்துகளில் 12 ஓட்டங்களை எடுத்து இவர் டி சில்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் மட்டையாட்டத்தில் 191 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100* எடுத்தார்.இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 204 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[1] 1999ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆசியத் தேர்வுத் துடுப்பாட்டக் கோப்பையில் விளையாடியது . பெப்ரவரி 16, கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் மட்டையாட்டத்தில் 140 பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்து இவர் சவகல் சிரீநாத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் மட்டையாட்டத்தில் 16 பந்துகளில் ஒன்பது ஓட்டங்கள் எடுத்து சவகல் சிறீநாத் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[2]

ஒருநாள் போட்டிகள்[தொகு]

1982 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.சனவரி 12, 1982 இல் சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் இரண்டு பந்துகளைச் சந்தித்த இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் கார்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஏழு இலக்குகளால் வெற்றி பெற்றது.[3]

வலதுகை மட்டையாளரான இவர் வலது கை மித வேகப் பந்துவீச்சாளரும் ஆவார். இவர் பாக்கித்தான் தேசிய அணி எசெக்ஸ், ஹபிப் வங்கி அணி, லாகூர் மற்றும் சர்கோதா ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவருக்கு சிலிம் எனும் புனைப்பெயர் உள்ளது.

சர்வதேச போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

1982 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .மார்ச் 5, கராச்சியில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் மட்டையாட்டத்தில் 55 பந்துகளில் 12 ஓட்டங்களை எடுத்து இவர் டி சில்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் மட்டையாட்டத்தில் 191 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100* எடுத்தார்.இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 204 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[4] 1999ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆசியத் தேர்வுத் துடுப்பாட்டக் கோப்பையில் விளையாடியது . பெப்ரவரி 16, கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் மட்டையாட்டத்தில் 140 பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்து இவர் சவகல் சிரீநாத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் மட்டையாட்டத்தில் 16 பந்துகளில் ஒன்பது ஓட்டங்கள் எடுத்து சவகல் சிறீநாத் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[2]

ஒருநாள் போட்டிகள்[தொகு]

1982 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.சனவரி 12, 1982 இல் சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் இரண்டு பந்துகளைச் சந்தித்த இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் கார்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஏழு இலக்குகளால் வெற்றி பெற்றது.[3] 1999 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து உலகக் கோப்பைத் தொடரில் விளையாடியது.சூன் 8, இல் மான்செஸ்டர் துடுப்பாட்ட அரங்கத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 19 பந்துகளைச் சந்தித்த இவர் ஆறு ஓட்டங்கள் எடுத்து பிரசாத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 47 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[5] 1987 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணி 237 ஓட்டங்கள் எடுத்து பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு 238 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 161 ஓட்டங்களில் ஐந்து இலக்குகளை இழந்தது. 77 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது களம் இறங்கிய இவர் 70 ஓட்டங்களை 36 பந்துகளில் எடுட்துன் அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியின் மூலம் இவர் பரவலாக கவனம் பெற்றார்.இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 2 இலக்குகளால் வெற்றி பெற்றது. (இரண்டு பந்துகள் மீதம் இருந்தது.[6]

சான்றுகள்[தொகு]

  1. "Full Scorecard of Pakistan vs Sri Lanka 1st Test 1982 - Score Report | ESPNcricinfo.com" (en).
  2. 2.0 2.1 "Full Scorecard of India vs Pakistan, Asian Test Championship, 1st Match - Score Report | ESPNcricinfo.com" (en).
  3. 3.0 3.1 "Full Scorecard of Pakistan vs West Indies, Australian Tri Series (CB Series), 11th Match - Score Report | ESPNcricinfo.com" (en).
  4. "Full Scorecard of Pakistan vs Sri Lanka 1st Test 1982 - Score Report | ESPNcricinfo.com" (en).
  5. "Cricket Stories - Read all Cricket Articles, Features Online | ESPNcricinfo.com" (en).
  6. "Scorecard: India v Pakistan". Howstat (18 February 1987).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலீம்_மாலிக்&oldid=2866498" இருந்து மீள்விக்கப்பட்டது