சலீம் அலி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சலிம் அலி சரோவர் ஏரி
Salim Ali Lake
சலிம் அலி சரோவர் ஏரி
சலிம் அலி சரோவர் ஏரி
அமைவிடம்அவுரங்காபாத், மகாராட்டிரம்
ஆள்கூறுகள்19°53′57.26″N 75°20′32.23″E / 19.8992389°N 75.3422861°E / 19.8992389; 75.3422861ஆள்கூறுகள்: 19°53′57.26″N 75°20′32.23″E / 19.8992389°N 75.3422861°E / 19.8992389; 75.3422861
வடிநில நாடுகள் இந்தியா
Settlementsஅவுரங்காபாத், மகாராட்டிரம்

சலிம் அலி சரோவர் (ஏரி) (Salim Ali Lake, மராத்தி:पक्षीमित्र सलीम आली सरोवर) இது, இந்திய தில்லி நுழைவாயிலின் அருகேயும் மற்றும்,அவுரங்காபாத், இமாயத் பாக்கிற்கு எதிரேயும் அமைந்துள்ளது. நகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இது, முகலாயர் காலத்தில் இது கிசிரி தலாப் எனப்பட்டது. மேலும் உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும், மற்றும் இயற்கையியல் அறிஞரருமான சலீம் அலி என்பவர் பெயரால் அழைக்கப்படும் இந்த ஏரி, அப்பிரதேச அவுரங்காபாத் ஆணையாளர் பிரிவின் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.[1]

அவுரங்கசீப் தனது அரண்மனையின் எதிர்புறம் அமைக்குமாறு கட்டளையிட்டார்.இந்த மறுசீரமைக்கப்பட்ட பகுதிதான் பிற்காலத்தில் முகலாயர் தோட்டமாகவும் அழைக்கப்பட்டது.(தற்போது ஹிமாயத் பாக் என வழங்கப்படுகிறது).

முகலாய காலம்[தொகு]

அவுரங்கசீப்பின் காலத்தில், ஒரு பெரிய சதுப்பு நிலம் இருந்தது அது பேகும்புரா மற்றும் மக்பரா பகுதியின் வடக்கு பகுதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது உள்ள சலிம் அலி ஏரி. இது சுகாதாரமான நிலையில் இல்லை ஆசீப்பின் அவைகளில் ஒன்றாகவும் இருந்தது. தற்போது டெல்லி நீதிமன்றம் அமைந்துள்ள இடம் போக மீதமுள்ள இடம் தில்லி வாயிலுக்கு அப்பால் உள்ள பல வகையான மரங்கள், பழங்கள் கொண்ட கிஹிசிரி தலாய் ஆகும்.

அவுரங்கசீப்
அவுரங்கசீப்

மற்ற சிறிய தொட்டி கன்வல் அல்லது லோட்டி தலாவ் (கிலா-இ-ஆர்க் மற்றும் பேகம்பூராவிற்கு இடையிலான இன்றைய ஆம் காஸ் மைதானத்திற்கு அருகே) அமைந்துள்ளது. ஒரு வசந்தகாலத்தில் அவுரங்கசீப்பின் அரண்மனை மற்றும் மெக்கா நுழைவாயில் வெள்ளம் அடைந்ததிலிருந்து நகரத்தை காப்பாற்றுவதற்காக இசைக்குழு அழிக்கப்பட்டது.

தற்போதைய காலம்[தொகு]

சலிம் அலி தலாப் தற்போது ஒரு பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது. இதனை சுற்றியுள்ள ஏரியின் அமைப்பு புலம் பெயர்ந்து முட்டைகள் இட்டு இனப்பெருக்கம் செய்ய வரும் பல வகையான் பறவைகளைக் காண ஏதுவாக அமைந்துள்ளது. அங்குள்ள தோட்டத்தை தற்போது அவுரங்காபாத் நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.பனி மற்றும் மழைக்காலங்களில் ஏரியில் நீர் நிரம்பி காணப்படும் காலங்களில் படகுசவாரிகளும் அனுமதிக்கப்படுகின்றது.

பல்லுயிர்[தொகு]

File:Blue Linckia Starfish.JPG
File:Blue Linckia Starfish.JPG
File:Fungi of Saskatchewan.JPG
File:Fungi of Saskatchewan.JPG

சலிம் அலி ஏரி மற்றும் அதன் சுற்றுப்புறமானது அரிதான மற்றும் வளமான பல்லுயிர்[2] வனப்பகுதி ஆகும். இதில் 16 மர வகைகளும், 11 புதர் வகைகளும், 8 ஏறுமுண்டுகளும், 32 புல்வெளிகு தாவர மூலிகைகளும், 10 வகை பாசிகள், 12 நீர்வாழ் மூலிகைகள், 16 நீர்வாழ் பூச்சிகள், மொல்லுக்களும் ஒன்பது வகை மீன், 15 வகை ஊர்வன, ஏழு வகை பாலூட்டிகள் மற்றும்  102 வகையான பூச்சிகள் உள்ளன. நகரில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பறவை நிபுணர்கள் மேற்கொண்ட முயற்சியால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியை பொது மக்களின் பார்வைக்கு தடைவிதித்து இதனை  ஒரு பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maharastra Salim Ali Lake". www.indiamapped.com (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-07-15.
  2. [மூலத்தைத் தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலீம்_அலி_ஏரி&oldid=2801995" இருந்து மீள்விக்கப்பட்டது