ஜாலாவார் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சலாவார் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
5 ஆம் எண் ஜலாவார் மாவட்டம் ஆகும்.

சலாவார் மாவட்டம் (Jhalawar-ஜலாவார்) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள 33 மாவட்டங்களில் ஒரு மாவட்டமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க ஜலவர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள கோல்வி கிராமத்தில் பௌத்த கோல்வி குகைகள் உள்ளது.

எல்லைகள்[தொகு]

இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடமேற்கே கோட்டா மாவட்டமும், வடகிழக்கே பரான் மாவட்டமும், கிழக்கே குணா மாவட்டமும், தெற்கே ராஜ்கார் மர்றும் ஷாஜாபூர் மாவட்டமும் அமைந்துள்ளது.

வட்டங்கள் (தாலுகாக்கள்)[தொகு]

இம்மாவட்டம்,

  • ஜலாவார்
  • அக்லேரா
  • பாவானி
  • மாண்டி
  • பிரவா
  • கான்பூர்
  • மனோகர் தானா

ஆகிய ஆறு தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 14,11,327 ஆகும்.[1]இது சுவிட்ஸர்லாந்து நாட்டின் மக்கட் தொகைக்குச் சமமாகும்.[2] மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 227 எனும் வீதத்தில் உள்ளது.[1]கல்வியறிவு 62.13% ஆகும்.[1]

பழங்குடியினர்[தொகு]

இம்மாவட்டத்தில் பல பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுள் மீனா மக்கள் மற்றும் பில் மக்கள் எனும் பழங்குடி இனத்தவர் பெரும்பான்மையினாராய் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01. Swaziland 1,370,424 {{cite web}}: line feed character in |quote= at position 10 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாலாவார்_மாவட்டம்&oldid=3618060" இலிருந்து மீள்விக்கப்பட்டது