சலாவதி தீவு
புவியியல் | |
---|---|
ஆள்கூறுகள் | 1°6′24″S 130°51′59″E / 1.10667°S 130.86639°E |
தீவுக்கூட்டம் | இராஜா அம்பாட் தீவுகள் |
பரப்பளவு | 1,623 km2 (627 sq mi) |
சலாவதி உத்தாரா இயற்கை காப்பகம் | |
---|---|
Pulau Salawati Utara Nature Reserve Cagar Alam Pulau Salawati Utara | |
ஐயுசிஎன் வகை Iஏ (Strict Nature Reserve) | |
பரப்பளவு | 57,000 ha (220 sq mi) |
இயக்குபவர் | மேற்கு பப்புவா இயற்கை வள பாதுகாப்பு மையம் |
சலாவதி தீவு (இந்தோனேசியம்: Pulau Salawati; ஆங்கிலம்: Salawati Islands) என்பது இந்தோனேசியா, தென்மேற்கு பப்புவா மாகாணத்தில் தென்மேற்கு பப்புவாவில் (முன்னர் மேற்கு பப்புவா) உள்ள இராஜா அம்பாட் தீவுகளில் உள்ள நான்கு பெரிய தீவுகளில் ஒன்றாகும்.
இதன் பரப்பளவு 1,623 கிமீ2. சலாவதி தீவு, நியூ கினியில் இருந்து தென்கிழக்கில் சேலே நீரிணையால் (கலோவா நீரிணை, ரிவெஞ்சஸ் நீரிணை) பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாந்தா தீவில் இருந்து வடக்கே பிட் நீரிணையால் (Pitt Strait) (சேஜ்வின் நீரிணை) பிரிக்கப்பட்டுள்ளது.
வரலாறு
[தொகு]1526-ஆம் ஆண்டில் போர்த்துகீசிய மாலுமி ஜார்ஜ் டி மெனெசஸ் மற்றும் அவரது குழுவினர், இராஜா அம்பாட் தீவுகளை முதன்முதலில் பார்த்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகன் சுல்தானகத்துடன் (Sultanate of Bacan) ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார தொடர்புகளின் காரணமாக, 15-ஆம் நூற்றாண்டில் இசுலாம் முதன்முதலில் இராஜா அம்பாட் தீவுகளுக்கு வந்தது.[2]
16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில், மலுக்குவை தளமாகக் கொண்ட திடோர் சுல்தானகம் (Sultanate of Tidore); இராஜா அம்பாட் தீவுகளுடன் நெருக்கமான பொருளாதார அரசியல் உறவுகளைக் கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில், இசுலாம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது. மேலும் உள்ளூர்த் தலைவர்கள் இசுலாத்தை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர்.[3]
இந்த தீவில் ஒரு காலத்தில் சலாவதி இராச்சியம் (Salawati Kingdom) என்ற ஓர் இசுலாமிய இராச்சியம் இருந்தது.[4] தீவின் தெற்குப் பகுதி சைலோலோப் இராச்சியத்தின் (Sailolof Kingdom) ஒரு பகுதியாக இருந்தது.
நிர்வாகம்
[தொகு]சலாவதி தீவு, தென்மேற்கு பப்புவா மாகாணத்தின் ஐந்து சிறிய கடற்கரைத் தீவுகளைக் கொண்ட நிர்வாக மாவட்டங்களைக் கொண்டுள்ளது. தீவின் வடக்குப் பகுதி இராஜா அம்பாட் பிராந்தியத்தின் வடக்கு சலாவதி, மேற்கு சலாவதி மற்றும் மத்திய சலாவதி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சலாவதி தீவின் தெற்குப் பகுதி சோரோங் பிராந்தியத்தின் தெற்கு சலாவதி மற்றும் மத்திய சலாவதி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஐந்து மாவட்டங்களும் 1,623 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ளன. மேலும் 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மொத்த மக்கள் தொகை 8,739 ஆக இருந்தது.[5]
சலாவதி உத்தாரா இயற்கை காப்பகம்
[தொகு]சலாவதி உத்தாரா இயற்கை காப்பகம் (Pulau Salawati Utara Nature Reserve), சலாவதி தீவின் வடக்குப் பகுதியின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. சலாவதி தீவின் வடக்குப் பகுதியில் 570 கிமீ2 பரப்பளவைக் கொண்ட இந்தக் காப்பகம், தீவின் பூர்வீகத் தாழ்நில மழைக்காடுகளின் ஒரு பகுதியைப் பாதுகாக்கிறது.[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Pulau Salawati Utara". Protected Planet. Accessed 8 August 2021. [1]
- ↑ Wanggai, Toni V. M. (2008). Rekonstruki sejarah umat Islam di tanna Papua [Reconstruction of the History of lslam in Papua]. Syariff Hidayatullah State Islamic University Jakarta (in Indonesian). Retrieved 2022-03-13.
- ↑ Slama, Martin (2015), "Papua as an Islamic Frontier: Preaching in 'the Jungle' and the Multiplicity of Spatio-Temporal Hierarchisations", From 'Stone-Age' to 'Real-Time': Exploring Papuan Temporalities, Mobilities and Religiosities, ANU Press, pp. 243–270, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-925022-43-8
- ↑ "Sejarah Kerajaan Salawati Sosial Ekonomi dan Politiknya". www.slideshare.net (in இந்தோனேஷியன்). Retrieved 18 November 2022.
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் சலாவதி தீவு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.