சலால் அத்-தின் மிங்புர்னு
மிங்புர்னு Mingburnu | |
---|---|
நினைவுச்சின்னம் | |
ஆட்சிக்காலம் | 1220 – 1231 |
முன்னையவர் | இரண்டாம் அலா அத்-தின் முஹம்மத் |
பின்னையவர் | இல்லை |
வாழ்க்கைத் துணை | மெலிகா கதுன் டெர்கென் கதுன் ஃபுலானா கதுன் |
வாரிசு | |
மன்கடுய்-ஷா கய்மகர்-ஷா | |
முழுப்பெயர் | |
லகப்: ஜலால் அத்-தின் (சுருக்கமாக) குன்யா:அபுல்-முஜாஃபர் கொடுக்கப்பட்ட பெயர்: மங்குபெர்டி | |
குடும்பம் | அனுஷ்டெஜின் குடும்பம் |
தந்தை | இரண்டாம் அலா அத்-தின் முஹம்மத் |
தாய் | அய்-சிச்செக் |
பிறப்பு | 1199[1] |
இறப்பு | 1231 |
சமயம் | இசுலாம் |

சலால் அத்-தின் மிங்புர்னு (Jalal ad-Din Mingburnu, பாரசீகம்: جلال الدین خوارزمشاه; துருக்மெனியம்: Jelaleddin Meňburun அல்லது Jelaleddin Horezmşa; முழுப் பெயர்: ஜலால் அத்-துன்யா வா அத்-தின் அபுல்-முசாஃபர் மங்குபெர்தி இப்னு முகம்மது, மங்குபெர்தி அல்லது மங்குபர்னி (துருக்கியம்: "கடவுள் கொடுத்த")), என்பவர் குவாரசமியப் பேரரசின் கடைசி ஆட்சியாளர் ஆவார். இவர் அனுஷ்டெஜின் அரசமரபைச் சேர்ந்தவர் ஆவார். இந்த அரசமரபு ஒகுஸ் துருக்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்ததாகும்.[2] இவர் இரண்டாம் அலா அத்-தின் முஹம்மத் மற்றும் அவரது மனைவி ஐசிசெக்கின் மூத்த மகன் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
1220ல் இவரது தந்தை இரண்டாம் அலா அத் - தின் முஹம்மத் செங்கிஸ் கானால் தோற்கடிக்கப்பட்ட போது ஜலால் அத் - தின் மெங்குபிர்டி ஆட்சிக்கு வந்தார். ஆனால் இவர் தனது தந்தை சூட்டியிருந்த பட்டமான ஷாவைத் தவிர்த்தார். தன்னை சுல்தான் என்று அழைத்துக் கொண்டார்.
உசாத்துணை[தொகு]
- ↑ ru:Джелал ад-Дин Манкбурны
- ↑ Kononov, A.N. (1958). Genealogy of Turkmens. Abu'l-ghazi Khan of Khiva. Academy of Sciences of USSR. பக். 193. http://www.vostlit.info/Texts/rus6/Abulgazi/frametext1.htm.