சலாலுதீன் காதர் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சலாகுதீன் காதர் சவுத்திரி (Salahuddin Quader Chowdhury) வங்காளதேசத்தைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் வங்காளதேச தேசியவாதக் கட்சியின் மூத்த பிரமுகர் ஆவார். சிட்டகொங் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] 1971ல் வங்காளதேசம் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற நடத்திய போரின் போது, போர்க்குற்றங்கள் இழைத்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது[2]. 30 செப்டம்பர் 2013 அன்று இவர் மீதான போர்க் குற்றங்களுக்கு மரண தண்டனை என சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.[3][4]

இளமைக்காலம்[தொகு]

இவர் சிட்டகாங் பகுதியியை சார்ந்த அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை பாஸ்லூல் காதர் செளத்ரி வங்கதேச விடுதலைக்கு முன் பாகிஸ்தான் தேசியக்கட்சியைச் சேர்ந்தவர். மேலும் இவர் வங்கதேச விடுதலையை எதிர்த்தவர். எனவே இவர் மீதும் போர் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெறும் போது சிறைச்சாலையில் மரணமடைந்தார்.[5]

போர்க்குற்றங்கள்[தொகு]

 • 7 இந்துச் சிறார்களைக் கடத்தியது அவர்களில் 6 பேரைக் கொன்றது.
 • பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இணைந்து மாத்யா கோரிராவைக் கொலைசெய்தது.
 • குண்டேஷ்வரி ஒளஷதயாலா நிர்வாகி மற்றும் சமூக சேவகரான நூட்டன் சந்திரா சின்ஹாவைக் கொலைசெய்தது.
 • பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இணைந்து அர்சான் பகுதியில் 32 பேரைக் கொன்றது மற்றும் கற்பழிப்பு, திருட்டு.
 • சதீஷ் சந்திர பாலித் என்பவரை வீட்டோடு எரித்துக் கொன்றது.
 • பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இணைந்து இந்து மக்கள் அதிகம் வசிக்கும் ஷாஹாபுரா பகுதியில் 76 இந்து மக்களைக் கொன்றது.

மேலும் பல.[6]

மேற்கோள்கள்[தொகு]

 1. "9th Parliament MP List". Jatiyo Sangshad. மூல முகவரியிலிருந்து 6 August 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 April 2011.
 2. Sarkar, Kailash (17 December 2010). "SQ Chy remanded". The Daily Star. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=166365. பார்த்த நாள்: 20 April 2011. 
 3. "[http:/http://www.bbc.co.uk/tamil/global/2013/10/131001_bangladeshwar.shtml போர்க்குற்றம்: இன்னொரு பங்களாதேஷ் அரசியல்வாதிக்கு மரண தண்டனை]".
 4. senior bnp mp given death for 1971 war crimes
 5. "Fazlul Quader Chowdhury".
 6. "9 war crimes charges proven against SQ Chy".