உள்ளடக்கத்துக்குச் செல்

சலனி தாரகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலனி தாரகா
ශලනි තාරකා
தாய்மொழியில் பெயர்ශලනි තාරකා
பிறப்புகோனகும்புர பங்குகராகே சலனி தாரக விஜயபண்டார
15 நவம்பர் 1990 (1990-11-15) (அகவை 35)
பலங்கொட, இலங்கை
கல்விநியூஸ்டெட் பெண்கள் கல்லூரி
பணிநடிகை, மாடல், நடனக் கலைஞர், தொகுப்பாளர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2007 முதல் தற்போது வரை
பெற்றோர்
  • சுசந்த விஜயபண்டாரா (தந்தை)
  • சுராஜி பெர்னாண்டோ (தாய்)
வாழ்க்கைத்
துணை
நிகாதா சல்காடோ (திருமணம் 2023)
விருதுகள்சிறந்த நடிகை
மிகவும் பிரபலமான நடிகை
வலைத்தளம்
Official Website

சலனி தாரகா (Shalani Tharaka) (கோனகும்புர பங்குகராகே சலனி தாரக விஜயபண்டார) (பிறப்பு 15 நவம்பர் 1990) இலங்கை நடிகை மற்றும் மாடல் ஆவார்.[1] இலங்கையின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவரான தாரகா, 2007இல் இலங்கை அழகிப் போட்டியான சிரசா குமரியாவின் பட்டத்தைப் பெற்றுள்ளார்.[2] நடிப்பைத் தவிர, இவர் ஒரு நடனக் கலைஞர், பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சலனி தாரகா 1990 நவம்பர் 15 அன்று இலங்கையின் பலங்கொடைவில் பிறந்தார். இவரது தாயார் சுராஜி பெர்னாண்டோ சிங்கள திரைப்பட மற்றும் தொலைக்காட்சியில் ஒரு நடிகை ஆவார்.[3] சலனி நீர்கம்போவில் உள்ள நியூஸ்டெட் பெண்கள் கல்லூரியில் தனது கல்வியை முடித்தார்.

சலனி தனது நீண்டகால துணையான நிகாதா சல்கடோவை மணந்தார். இவர்களின் திருமணம் 2023 ஆகத்து 18 அன்று நடைபெற்றது.[4]

தொழில்

[தொகு]

2007இல், தனது பதினேழு வயதில், சிரசா தொலைக்காட்சி நடத்திய சிரசா குமரியா அழகுப் போட்டியில் வெற்றி பெற்று, பரவலான பிரபலத்தைப் பெற்றார். செர்லி பி. டெலங்காவாலா இயக்கிய 'பூஜசனயா' என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் இவர் முதன்முதலில் நடித்தார். 'பூஜசனயா' தொடரில் சூரஜ் மாபா இவருடன் இணைந்து நடித்தார். பின்னர், 'இசுரு பவனா', 'ஹன்சி', 'கிரிதேவி', 'அபி அபி வாகே (I & II)', 'கங்கா அடாரா' மற்றும் 'சண்டா சண்டா வாகே' போன்ற பல்வேறு வகைகளில் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ் பெற்றார்.[5][6]

தொலைக்காட்சித் தொடர்களைத் தவிர, ஹீரோ ஹோண்டா, ரெய்னோ[7] மற்றும் ஜேனட் ஆகியவற்றுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இவர் பங்களித்துள்ளார். பிரின்யனின் 'ஓயா தேசே', டி என் எசுஇன் 'மாதா ஓயா', சாஃபி மற்றும் டெலோனின் 'வசுதுவே' போன்ற இசை காணொளிகளிலும் இவர் நடித்துள்ளார்.

2012இல், தாரகா 'செல்வம்' திரைப்படத்தில் முதன்முதலில் திரையுலகில் அறிமுகமானார். இவர் "மேதாவி" என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.[8] பின்னர் இவர் சுபந்தனா என்ற திகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளாா். இவர் சிரசா டான்சிங் ஸ்டார்ஸ் மற்றும் ஹிரு சூப்பர் டான்சர் ஆகியவற்றின் இரண்டாவது தொடாிலும் போட்டியிட்டார்.[9]

19 செப்டம்பர் 2020 அன்று, 16வது ராய்கம் டெலி'சு விழாவில் சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகை மற்றும் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நாடக நடிகை ஆகிய இரண்டு விருதுகளையும் இவர் பெற்றுள்ளாா். 24 ஆண்டுகளில் ஒரு நடிகை ஒரே நேரத்தில் இரண்டு விருதுகளையும் வென்றது இதுவே முதல் முறையாகும்.[10] 2021ஆம் ஆண்டில், இவர் பல இலங்கை பிரபலங்களுடன் ரஃபெல்லா பெர்னாண்டோ பிரபலங்கள் காலண்டரில் தோன்றினார். இது ஒரு தனி நபருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த குடிமக்கள் கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shalani Tharaka filmography". Digital Identity of Sinhala Cinema. Retrieved 2 August 2020.
  2. Sirasa Kumariya 2007 Final at BMICH 05/23/2007.
  3. "'Issarahata Yanna'; Story between a doctor and a conductor". sundaytimes. Retrieved 2 August 2020.
  4. ""විවාහය දෙදරවමින් ශලනි තාරකා දික්කසාදයට සූදානම් වෙයි.. "ප්‍රේක්ෂකයන් හඩවමින් සිදු වෙන්න යන දේ..." gagana. Retrieved 2 August 2020.
  5. "Giridevi who hates herself". Aruna. Retrieved 2 August 2020.
  6. "Shalani Tharaka is in a crazy case". Divaina. Retrieved 2 August 2020.
  7. "Making of the " Raino Tv commercial " - Facebook". www.facebook.com.
  8. "Shalani Tharaka films". IMDb. Retrieved 2 August 2020.
  9. "Shalani Tharaka became a mermaid". Saaravita. Retrieved 2 August 2020.
  10. "Winter is coming but spring is coming". Sarasaviya. Retrieved 2 August 2020.
  11. "Rafaela's calendar changed by art stars". Sarasaviya. Retrieved 2021-02-17.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலனி_தாரகா&oldid=4547910" இலிருந்து மீள்விக்கப்பட்டது