உள்ளடக்கத்துக்குச் செல்

சலங்கோ தீவு

ஆள்கூறுகள்: 1°36′S 80°52′W / 1.600°S 80.867°W / -1.600; -80.867
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலங்கோ தீவு
Salango Island
புவியியல்
அமைவிடம்அமைதிப் பெருங்கடல்
ஆள்கூறுகள்1°36′S 80°52′W / 1.600°S 80.867°W / -1.600; -80.867
பரப்பளவு1 km2 (0.39 sq mi)
நீளம்1,3 km (8.1 mi)
அகலம்1,15 km (71.5 mi)
உயர்ந்த புள்ளி75 மீ
நிர்வாகம்
மாகாணம் மனாபி மாகாணம்]]
மக்கள்
மக்கள்தொகை0
அடர்த்தி0 /km2 (0 /sq mi)

சலங்கோ தீவு (Salango Island) தென் அமெரிக்காவில் அமைந்துள்ள தீவாகும். சுமார் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசிபிக் பெருங்கடலில் ஈக்வடோரில் உள்ள மனாபி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சலங்கோ நகருக்கு அருகில் இத்தீவு அமைந்துள்ளது.

சலங்கோ தீவு மச்சாலிலா தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும். மேலும் இத்தீவு நீல-கால் பூபி எனப்படும் சுலா நெபோக்சி போன்ற கடற்பறவைகளின் தாயகமாகும். அதே நேரத்தில் தீவின் நீரில், எப்போதாவது திமிங்கலங்களையும் காண முடியும். சலங்கோ தீவின் சுற்றுப்புறங்களில் நீல-கால் பூபி, கடல் சிங்கங்கள் மற்றும் பெரிய பாறைகளைக் காண முடியும். இயற்கையின் அரிப்பு காரணமாகத் தோன்றியுள்ள[1] பாறைகளின் தனித்துவமான வடிவங்கள், கிங் காங் குரங்கு மற்றும் ராட்சத ஆமை போன்ற பெயர்களைப் பெறுகின்றன.[2][3]

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Playa de Los Frailes, un paraíso en la Costa ecuatoriana". viveviajando. Retrieved March 14, 2023.
  2. "Un viaje a la isla Salango, un paraíso en el corazón de Manabí". eltelegrafo. December 14, 2014. Retrieved March 14, 2023.
  3. "Costas con detalles relevantes". viajalavida. April 6, 2015. Retrieved March 14, 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலங்கோ_தீவு&oldid=4291448" இலிருந்து மீள்விக்கப்பட்டது