உள்ளடக்கத்துக்குச் செல்

சலக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சல
சலக் பழம் (salak pondoh cultivar)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
ஒருவித்திலை
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. zalacca
இருசொற் பெயரீடு
Salacca zalacca
(Gaertn.) Voss

சலக் (Salak; தாவரப் பெயர் : Salacca zalacca) என்பது பனை மர இனமாகும். இது அரேகேசி குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளது.. இந்தோனேசியா நாட்டின் தீவுகளில் ஒன்றான யாவா, சுமத்ராவை தீவுகளைத் தாயகமாகக் கொண்ட தாவரயினமாகும். இது இந்தோனேசியாவின் பிற பகுதிகளிலும் உணவுப் பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் பாலி, லோம்போக், திமோர், மலுகு, சுலவேசி ஆகிய இடங்களில் இயற்கையான வளர் தாவரங்களாக மாற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. .[1][2]

வளரியல்பு

[தொகு]
  • இது மிகவும் குறுகிய தண்டுகள் கொண்ட பனை மரமாகும். இதன் தண்டுகள் 6 மீட்டர் (20அடி) வரை வளரும். ஒவ்வொரு இலையும், 2 மீட்டர் நீளமுள்ள பெட்டியோல் அமைத்துள்ளது. ஒவ்வொரு 15 சென்டிமீட்டர் (5,9 அங்குலம்) வரை வளரும் முள்ளிலைகளைப் பெற்றிருக்கின்றன. மேலும், ஏராளமான இலைச்செதில்களையும் கொண்டுள்ளன.
  • பனை அடிப்பகுதியில், கொத்துக்களாக பழங்கள் வளர்கின்றன. செம்பழுப்பு கருநிற செதில்கள் கொண்ட தோல் காரணமாக, பாம்பு பழம் அல்லது பாம்புத் தோல் பழம் என்று அழைக்கின்றனர். சாப்பிடுவதற்கு முன்பு, இத்தோல் அகற்றப்படுகிறது. தோலின் உட்புறம், வெள்ளை நிறமாகக் காணப்படுகிறது. தோல் நீக்கிய அதன் உட்புறம், உரித்த பூண்டு வடிவம் போன்று, மூன்று, நான்கு சுலைகளைப் பெற்றுள்ளது. இதன் சுலைகள் வெளிர் மஞ்சள் நிறத்துடன், கடிக்கும் போது சிறுநெல்லி போன்றும், நீருடனும், குறைவான இனிப்பு, புளிப்புச் சுவையுடனும் இருக்கிறது.
  • இதன் பயிர் வகைகள் குறிப்பிட்டத்தக்க வேறுபாடுகளுடன், வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட இதன் வகைகள் உள்ளன.[3] இருப்பினும், யோக்யகர்தாவிலிருந்து வரும் சாலக் பழம், பலரால் விரும்பப்படுகிறது.
சல
உணவாற்றல்322 கிசூ (77 கலோரி)
0.4 g
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kew World Checklist of Selected Plant Families
  2. Govaerts, R. & Dransfield, J. (2005). World Checklist of Palms: 1-223. The Board of Trustees of the Royal Botanic Gardens, Kew.
  3. Naharudin, A. Prasetya. "Snake fruit (Salak) explained – Salacca Zalacca Information & Facts". thesnakefruit.com. Archived from the original on August 7, 2020. Retrieved 21 பெப்பிரவரி 2025. {{cite web}}: Check date values in: |access-date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Salacca zalacca
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Supriyadi; Suhardi; M. Suzuki; K. Yoshida; T. Muto; A. Fujita; N. Watanabe (2002). "Changes in the Volatile Compounds and in the Chemical and Physical Properties of Snake Fruit (Salacca edulis Reinw) Cv. Pondoh during Maturation". J. Agric. Food Chem. 50 (26): 7627–7633. doi:10.1021/jf020620e. பப்மெட்:12475281. Bibcode: 2002JAFC...50.7627S. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலக்&oldid=4212889" இலிருந்து மீள்விக்கப்பட்டது