சர் இ போல் மாகாணம்
சர்-இ போல்
Sar-e Pol سرپل | |
---|---|
ஆப்கானிஸ்தானில் சர்-இ போல் உயர்நிலத்தைக் காட்டும் வரைபடம் | |
சர்-இ போல் மாகாண மாவட்டங்கள் | |
ஆள்கூறுகள் (Capital): 35°36′N 66°18′E / 35.6°N 66.3°E | |
நாடு | ஆப்கானித்தான் |
மாவட்டம் | சர்-இ போல் |
தலைநகரம் | சர்-இ போல் |
அரசு | |
• ஆளுநர் | முகமது சஹிர் வஹாத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 16,360 km2 (6,320 sq mi) |
மக்கள்தொகை (2013)[1] | |
• மொத்தம் | 5,32,000 |
• அடர்த்தி | 33/km2 (84/sq mi) |
நேர வலயம் | UTC+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-SAR |
முதன்மை மொழிகள் | தாரி, உசுபேகியம், துருக்குமேனியம் |
சர்-இ போல் (Sar-e Pol, also spelled Sari Pul (பாரசீக மொழி: سرپل; பஷ்தூ: سرپل), என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணமானது நாட்டின் வடபகுதியில் உள்ளது. இதன் எல்லைகளாக மேறிகிலும் வடக்கிலும் ஜௌஸ்ஜான் மாகாணம் மற்றும் பால்க் மாகாணம் உள்ளன. தெற்கில் கோர் மாகாணம் உள்ளது. கிழக்கில் சமங்கன் மாகாணம் உள்ளது. மாகாணமானது ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் 896 கிராமங்கள் உள்ளன. இதன் மக்கள் தொகையானது 532,000 ஆகும். இது பல இன பழங்குடி மக்களைக் கொண்ட. கிராமப்புற சமூகமாக உள்ளது. இந்த மாகாணமானது வட ஆப்கானித்தானின் அரசியல்வாதியான சயீத் நாசிம் மிஹன்பரஸ்ட் ஆதரவுடன் 1988 இல் உருவாக்கப்பட்டது.[2] மாகாணத்தின் தலைநகராக சர்-இ போல் நகரம் உள்ளது.
வரலாறு
[தொகு]16ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து 18ஆம் நூற்றாண்டின் இடைக் காலம்வரை, இந்த மாகாணத்தை புகாரின் கான்னேட்டுகள் ஆண்டனர். 1750ஆம் ஆண்டில் ஒரு நட்பு உடன்படிக்கை ஏற்பட்டு அதனால் இப்பகுதியானது புகாராவின் முராத் பெக் என்பவரால் அகமது ஷா துரானிக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு இப்பகுதி துராணியப் பேரரிசின் ஒரு பகுதியாக ஆனது. துராணியர்களைத் தொடர்ந்து இப்பகுதியானது பராக்ச்சாய் வம்சத்தால் ஆளப்பட்டது. 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் நடந்த மூன்று ஆங்கிலோ-ஆப்கானிய போர்களின்போது இப்பகுதி பிரித்தானியரால் தாக்கப்படவில்லை. 1980களில் நடந்த ஆப்கான் சோவியத் போர் வரை சுமார் நூறு ஆண்டுகளுக்கு இப்பகுதி அமைதியாக இருந்தது.
அரசியலும், நிர்வாகமும்
[தொகு]மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் மொஹமட் சஹிர் வஹாத் ஆவார். மாகாணத்தின் தலைநகராக சர்-இ போல் நகரம் உள்ளது. மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) கையாள்கிறது. மாகாண காவல்துறைத் தலைவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.
சையட் அன்வார் ரஹ்மத்தி, அஜிஸா ஜலிஸ், சயீத் அன்வர் சதாத், முகமது ஹொசைன் ஃபாஹிமி, சையெத் முகம்மது ஹொசைன் ஷெரிஃபி பால்காபி, ஹாஜி கைர் முகமது இமாக் ஆகியோர் சர்-இ போல் மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போதுள்ள ஆப்கானித்தான் மக்களவை (வொலேஸி ஜிர்கா) உறுப்பினர்களாவர்.[3]
நலவாழ்வு பராமரிப்பு
[தொகு]இந்த மாகாணத்தில் தூய்மையான குடிநீர் கிடைக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டு 8% என்ற விகிதத்தில் இருந்தது, இது 2011 ஆண்டு 15% என உயர்ந்துள்ளது.[4] திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுக்காடு 2005 ஆண்டில் 0 % என்ற எண்ணிக்கையில் இருந்து 2011 ஆண்டு 20 % என உயர்ந்தது.
கல்வி
[தொகு]மொத்த கல்வியறிவு விகிதம் (6+ வயதுக்கு மேற்பட்டவர்களில்) 2005 ஆண்டு 12% என்று இருந்தது. 2011 இல் இது 23% என உயர்ந்துள்ளது..
நிலவியல்
[தொகு]சர்-இ போல் மாகாணமானது குறிப்பாக இதன் தெற்குப் பகுதியானது ஒரு மலைப்பாங்கான மாகாணமாகும். இந்த மாகாணத்தின் பரப்பளவு 16,360 கிமீ. ஆகும். மாகாணத்தின் நான்கில் மூன்று பங்கு பகுதியானது (75%) மலைப்பாங்கான அல்லது அரை மலைப்பாங்கான நிலப்பகுதியாகும், மேலும் ஏழில் ஒரு பங்கு (75%) நிலப்பகுதியானது சமவெளிப் பகுதியாகும். மாகாணமானது ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 896 கிராமங்கள் உள்ளன.
மக்கள்வகைப்பாடு
[தொகு]மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 532,000 ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Settled Population of Sar-e-pul province by Civil Division , Urban, Rural and Sex-2012-13" (PDF). Government of Afghanistan: Central Statistics Office of Afghanistan. Archived from the original (PDF) on 2013-12-16. பார்க்கப்பட்ட நாள் 2012-10-22.
- ↑ Neamatollah Nojumi (2002). The rise of the Taliban in Afghanistan: mass mobilization, civil war, and the future of the region. Palgrave Macmillan. pp. 80–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-29584-4. பார்க்கப்பட்ட நாள் 30 March 2011.
- ↑ Independent Election Commission of Afghanistan, Afghanistan 2010 Wolesi Jirga Election Final Certified Results
- ↑ Archive, Civil Military Fusion Centre, "Archived copy". Archived from the original on 2014-05-31. பார்க்கப்பட்ட நாள் 2014-05-30.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)CS1 maint: Archived copy as title (link)