சர்வ பிண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சர்வ பிண்டி
Sarvapindi , mango pickle - aavakai.jpg
வகைசிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதெலுங்கானா
முக்கிய சேர்பொருட்கள்அரிசிமாவு
Cookbook: சர்வ பிண்டி  Media: சர்வ பிண்டி

சர்வ பிண்டி (Sarvapindi) (Telugu: సర్వపిండి) என்பது இந்தியாவின் தெலுங்கானாவில் அரிசி மாவு மற்றும் வேர்க்கடலையைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையான உணவாகும். இது வட்ட வடிவிலான அப்பம் (கேக்) போன்றதாகும். இது நல்கொண்டா மாவட்டத்தில், "தப்பால செக்கா" என்றும், கரீம்நகரில் "சர்வ பிண்டி" என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் சுவையான உணவாகும். "கஞ்ச்சு" என்றால் பாத்திரம் அல்லது வட்ட வடிவ கிண்ணம் என்றும் பொருள். பிண்டி என்றால் தெலுங்கு மொழியில் மாவு என்று பொருள். ஆகையால் "கஞ்ச்சு பிண்டி" என்ற சொற்றொடரை அரிசிமாவு என்று கூறலாம். இது கோதுமை மாவு போலவே தயாரிக்கப்பட்டு, வட்ட வடிவப் பாத்திரத்தின் மீது ஒட்டி வைக்கப்பட்டு செய்யப்படுகிறது. வாரங்கலில், இந்த வகை உணவு "ஜின்னப்பா" என்று அழைக்கப்படுகிறது. வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பொல்லேபள்ளி கிராமம் ஜின்னப்பா (சர்வ பிண்டி)க்கு பிரபலமானது, ஏனென்றால் பொல்லேபள்ளி கிராமத்தில் உள்ள சல்லா அனசூர்யாவின் வீட்டில் தான் ஜின்னப்பா பற்றிய கதை முதலில் தோன்றியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மழைக்காலத்தில் அனசூர்யா மிகவும் பசியுடன் இருந்தார். அவர் குறைவான எண்ணெயில் தயாரிக்கப்பட்ட புதிய உணவை விரும்பினார். அச்சமயம் அவள் வீட்டில் அரிசிமாவு மட்டுமே இருந்ததால், அது சர்வ பிண்டி சிற்றுண்டியை உருவாக வழிவகுத்தது. பின் தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள பொல்லேபள்ளி கிராமத்தில் சிலவற்றை (சர்வ பிண்டியை) விற்கத் தொடங்கினர். சில நாட்களில் நபர்களின் உதவியுடன் முழு தெலுங்கு மக்களும் சர்வ பிண்டி சிற்றுண்டியைப் பற்றிய செய்முறையை அறிந்துக்கொண்டனர்.

தேவையான பொருட்கள்[தொகு]

சர்வ பிண்டி அரிசி மாவு, சன்னா பருப்பு (துவரம்பருப்பு), வேர்கடலை மற்றும் நறுமணப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாகும்..[1]

சொற்பிறப்பு[தொகு]

சர்வ பிண்டி என்ற சொல் இரு வேறு சொற்களின் கலவையிலிருந்து வந்ததாகும். "சர்வ" என்றால் ஆழமான பானை என்றும், "பிண்டி"என்பது அப்பம் என்பதையும் குறிக்கும். அதாவது கேக் வகையான உணவு தயாரிப்பில் வரும். சர்வ பிண்டியின் நேரடி மொழிபெயர்ப்பு "பான் கேக்" ஆகும். சர்வ பிண்டி தெலுங்கானா உணவு வகையில் வரக்கூடிய உணவாகும், இது இனம்சார்ந்த உணவுகளில் ஒன்று ஆகும்.

தரம்[தொகு]

இது தெலுங்கானா நாட்டைச்சார்ந்த பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வ_பிண்டி&oldid=3087673" இருந்து மீள்விக்கப்பட்டது