சர்வோதயம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்வோதயம் என்பது ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இந்த இதழானது காந்திய—சர்வோதயக் கொள்கையைப் பரப்புவதைக் குறிக்கோளாகக் கொண்டு வெளிவருகிறது. இக்கொள்கை பரப்பும் ஒரே இதழாகத் தமிழகத்தில் வெளிவரும் பத்திரிக்கையாகும். கோவையிலிருந்து வெளிவரும் இதன் ஆசிரியராக வெ. இராமச்சந்திரன் ஆவார். இந்த இதழ் 1943 ஆண்டு துவக்கப்பட்டதாக தெரிகிறது. இதழ் 1985 ஆம் ஆண்டு 42வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது.[1]

கிராமப் பொருள்கள் வளர்ச்சியை முக்கியமானதாகக் குறிப்பிடும் சர்வோதயம் இதழ், காந்திய வழியை, காந்திய தத்துவத்தை, அதன் உயர்வை எடுத்துக் கூறுகிறது. தனிமனித ஒழுக்கம், நேர்மை, சத்தியம், அயராத உழைப்பு, சுய கட்டுப்பாடு முதலியவற்றின் அவசியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அதற்கேற்ற சான்றோர் வாக்குகள், அறிஞர் பொன்மொழிகள், தலைவர்களின் சிந்தனைகளை இதழ்தோறும் வெளியிடுகிறது.

காந்தியப் பொருளாதார அடிப்படையில் பல்வேறு தொழில்கள், கைத் தொழில்கள், சிறு தொழில்கள் அவற்றின் நிலைமை, அவை எதிர் கொள்ளும் சிக்கல்கள் போன்றவை பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் புள்ளி விவரங்களுடன் ஒவ்வொரு இதழிலும் வெளிவருகின்றன.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 251–254. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வோதயம்_(சிற்றிதழ்)&oldid=3447193" இலிருந்து மீள்விக்கப்பட்டது