சர்வேயர் 1
தேசிய வான், விண்வெளி நிறுவனத்தின் (நாசா) ஆளில்லா சர்வேயர் திட்டத்தில் சர்வேயர் 1 முதல் நிலா மென்தரையிறங்கி ஆகும். 1969 ஆம் ஆண்டில் தொடங்கிய அப்பல்லோ நிலவு தரையிறக்கங்களுக்குத் தேவையான நிலா மேற்பரப்பு பற்றிய தரவுகளை இந்த நிலா மென்தரையிறங்கி திரட்டியது. சர்வேயர் 1 இன் வெற்றிகரமான மென்மையான தரையிறக்கம் , சோவியத் ஒன்றியத்தின் லூனா 9 ஆய்வின் முதல் மென்மையாக நிலவில் தரையிறங்கிய நான்கு மாதங்களுக்குப் பிறகு , வேற்று வானியல்சார் பொருளில் அமெரிக்கா விண்வெளி ஆய்வு வழி மென்தரையிறக்கம் முதன்முதலாக நிகழ்ந்தது.[1]
சர்வேயர் 1 1966 மே 30 அன்று கேப் கனாவெரல் புளோரிடாவில் உள்ள கேப் கனாவரல் விமானப்படை நிலையத்திலிருந்து ஏவப்பட்டது , இது ஜூன் 2,1966 அன்று நிலாவில் தரையிறங்கியது. சர்வேயர் 1 ஒரு தொலைக்காட்சிப் படக்கருவி, அதிநவீன கதிரலைத் தொலையளவியலைப் பயன்படுத்தி நிலா மேற்பரப்பின் 11,237 நிலை நிழற்படங்களைப் புவிக்கு அனுப்பியது.
சர்வேயர் திட்டம் கலிபோர்னியாவில் உள்ள இலாசு ஏஞ்சல்சு கவுண்டி தாரைச் செலுத்த ஆய்வகத்தால் ஆளுகை செய்யப்பட்டது. சர்வேயர் விண்வெளி ஆய்வு கலிபோர்னியா எல் செகுண்டோவில் உள்ள கியூசு விமான நிறுவனத்தால் கட்டப்பட்டது.
மரபும் தகவும்
[தொகு]1967 ஜனவரி 6 அன்று சர்வேயர் 1 12 மணி நேர அளவில் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. விண்கலம் நிலாவின் இயக்கம் குறித்த தரவுகளைப் புவிக்கு அனுப்பியது , இது புவியைச் சுற்றியுள்ள அதன் வட்டணையின் வரைபடத்தை செம்மைப்படுத்தவும் , இரு உலகங்களுக்கும் இடையிலான தொலைவைச் சிறப்பாக தீர்மானிக்கவும் பயன்படுத்தப்படும்.[2]
மேலும் காண்க
[தொகு]- நிலாவில் உள்ள செயற்கை பொருட்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]<ref>
tag with name "NASA" defined in <references>
is not used in prior text.வெளி இணைப்புகள்
[தொகு]- Surveyor 1 digitized panorama with color photometric target, from Surveyor Digitization Project
- யூடியூபில் Surveyor 1: 50 Years Later
- Panoramas of the Surveyor 1 landing site, from The International Atlas of Lunar Exploration by Philip J. Stooke
- Surveyor Program Results (PDF) 1969
- Surveyor I – A Preliminary Report – June 1, 1966 (PDF)
- Surveyor I mission report. Part II – Scientific data and results – Sep 1966 (PDF)
- Details of Surveyor 1 launch, and also more on the Surveyor program
- Surveyor I images at Lunar and Planetary Institute
- Surveyor Site 1 Lunar Map at Lunar and Planetary Institute
- Surveyor Site 1 Lunar PhotoMap at Lunar and Planetary Institute
- Lunar Orbiter 1 photo 192, showing the northeastern part of Flamsteed P crater, where Surveyor 1 landed