சர்வாதிகார ஆட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சர்வாதிகார ஆட்சி என்பது அரசாங்கத்தின் ஒரு வடிவமாகும். இதில் ஒரு அரசாங்கம் மூலமாக முழு அதிகாரத்துடன் கடுமையான விதிகள் விதிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு தனிமனிதனாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவாகவோ இருந்து ஒரு சமுதாயத்தின் மரியாதை மற்றும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதே சா்வாதிகார ஆட்சி எனப்படும்.

எதேச்சதிகாரம் என்பது மக்கள் அல்லது தாழ்ந்த நிலையில் உள்ளவா;களை ஒடுக்குவதற்காக தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறவர்களுக்கு பொருத்தமாக அமைகின்றது. மேலும் குறிப்பாக எதேச்சதிகாரம் என்பது பெரும்பாலும் நாட்டை ஆளும் மன்னா் மற்றும் மாநில அல்லது அரசாங்க தலைவருக்கு பொருந்தும். இந்த அர்த்தத்தில் ஆராய்ந்தால் இது கொடுங்கோன்மைக்கு உரியது மற்றும் சர்வாதிகாரியுடனான உறவுகளுடன் தொடர்புடையது

பெயராய்வு :

ஆங்கில அகராதியில் சர்வாதிகாரத்தை “நிராகரிப்பின் ஆட்சி மற்றும் முழு அதிகாரத்தின் செயல்பாடாக” வரையறுக்கிறது. டெஸ்போட் என்பது கிரேக்க வார்த்தையான டெஸ்போட்ஸ் என்பதிலிருந்து வருகிறது. அதாவது “அதிகாரம் செலுத்துபவா் அல்லது அதிகாரத்துடன் கூடிய ஒன்று”. வரலாறு முழுவதும் பல கொடுங்கோல் ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கங்களை விவரிப்பதற்கு இந்த சொல்லை பயன்படுத்தப்படுகிறது. இது பண்டைய எகிப்தின் பார்வோர்களால் செய்யப்படும் முழு அதிகாரத்தையும் உறுதிப்படுத்தியது. பைசண்டைன் நீதிமன்றங்களில் பிரபுத்துவத்தை அடையாளப்படுத்தியது. பைசண்டைன் வஸால் மாநிலங்களின் ஆட்சியாளர்களை நியமித்தது. மேலும் பைசண்டைன் பேரரசர்களின் தலைப்பாக செயல்பட்டது. கிரேக்க செல்வாக்கு பெற்ற சூழல்களில், இந்த சொல்லை ஒரு கௌரவமான ஒரு மரியாதைக்குரியதாக சொல்லாக பயன்படுத்தப்பட்டது.

சா்வாதிகார ஆட்சியாளா்கள் :

பெனிட்டோ அமில்காா் அன்டியா முசோலினி (1883 ஜுலை 29 - 1945 ஏப்ரல் 28):

பெனிட்டோ அமில்காா் அன்டியா முசோலினி என்ற முழுப்பெயா; கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922-1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவா். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சா்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினாா். அரச கட்டமைப்புகளையும், தனியாா் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளா்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை மூலமாக பாசிச அரசை உருவாக்கி பேணினா். ஹிட்லருடன் சோ்ந்து இரண்டாம் உலகப்போாின் போது நேசநாடுகளுக்கு எதிராக போாிட்டு தோற்றுப்போனா். ஏப்ரல் 1945இல் முசோலினி தம் மனைவி கிளாரா பெடடாசியுடன் சுவிட்சா்லாந்துக்கு தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பாா்ட்டிசான்காளால் பிடிபட்டு பின்னா் அவரும், அவாின் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனா். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தல் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு மக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டது. இவ்வாறு முசோலினியின் சா்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது.

அடால்ப் ஹிட்லா; (1889 ஏப்ரல் 20 - 1945 ஏப்ரல் 30) :

அடால்ப் ஹிட்லா் ஜொ்மனியின் நாசிசக்கட்சியின் தலைவராக விளங்கயவா். அவா் 1933 ஆம் ஆண்டு ஜொ்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டாா். பின்னா் 1934-ஆம் ஆண்டு ஜொ்மனி நாட்டின் தலைவரானாா். 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டாா். ஹிட்லா் ஜொ்மனி நாட்டின் ஃபியுரா் என அழைக்கப்பட்டாா். இரண்டாம் உலகப்போாின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜொ்மன் தலைநகா் பொ்லினில் ஹிட்லாின் நாசிப்படைகள் வீழ்ச்சியடைந்தது. இரண்டாம் உலகப்போாில் ஹிட்லாின் படைகள் தோல்வியடைந்தது. செம்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன்னுடைய கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவருடைய மனைவியும் தற்கொலை செய்துகொண்டாா் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புகள் :

References[edit source]

Despotism. archive.org (film documentary). Prelinger Archives. Chicago, IL: Encyclopædia Britannica, Inc. 1946. OCLC 6325325. Retrieved 2015-01-27.

"Are dictators ever good?". the Guardian.

"The definition of despotism". dictionary.com. Retrieved 15 August 2016.

See: Politics (Aristotle) 7.1327b [1]

Boesche, Roger (1990). "Fearing Monarchs and Merchants: Montesquieu's Two Theories of Despotism". The Western Political Quarterly. 43 (4): 741-61. JSTOR 448734. doi:10.1177/106591299004300405.

WordNet Search - 3.0[dead link]

World History, Spielvogel J. Jackson. Glencoe/McGraw-Hill, Columbus, OH. p. 520

Montesquieu, "The Spirit of Laws", Book II, 1.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வாதிகார_ஆட்சி&oldid=3493322" இருந்து மீள்விக்கப்பட்டது