சர்வதேச பாலம் மற்றும் கட்டுமானப் பொறியியல் கூட்டமைப்பு
சர்வதேச பாலம் மற்றும் கட்டுமானப் பொறியியல் கூட்டமைப்பு (International Association for Bridge and Structural Engineering) பாலம் மற்றும் இதர கட்டுமானப் பொறியியல் சார்ந்த தொழினுட்ப மற்றும் நவீன முறைகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு லாப நோக்கமற்ற நிறுவனமாகும். இணக்கமான 14 நாடுகள் இணைந்து 1929ல் தொடங்கப்பட்ட இக்கூட்டமைப்பு பலநாடுகளில் தனது கிளைக்குழுக்களையும் கொண்டுள்ளது. தொழினுட்பம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், கலாச்சார மற்றும் சமூகக் காரணிகளை ஆராய்ந்து கட்டுமானப் பொறியியல் துறையில் உதவிகளைப் பரிமாறிக்கொள்கிறது.[1]
விருது
[தொகு]2000ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த கட்டுமான விருதை வழங்கி வருகிறது. இவ்விருது மிகச் சிறப்பான, புதுமையான அல்லது கற்பனை வளம் படைத்த, அண்மைய ஐந்து ஆண்டுகளில் முழுமையடைந்த கட்டுமானத்திற்கு வழங்கப்படுகிறது. அத்திட்டத்தின் வடிவமைப்பாளர், பொறியாளர், ஊழியர் மற்றும் உரிமையாளரை ஊக்குவிக்கும் விதமாக இவ்விருதினை வழங்கி வருகிறது.
சர்வதேச பாலம் மற்றும் கட்டுமானப் பொறியியல் கூட்டமைப்பின் இந்திய தேசியக்குழு
[தொகு]இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில் 1957 மே மாதத்தில் இக்குழு அமைக்கப்பட்டது. திட்டமிடல், வடிவமைப்பு, பகுப்பாய்வு, வரைமுறைபடுத்தல், மேலாண்மை, செயல்பாடு, பராமரிப்பு, துப்புரவு மற்றும் புனரமைப்பு ஆகியவற்றை இந்தியப் பாலங்கள் சார்ந்து செய்கிறது. மேலும் பல கருத்தரங்கு மற்றும் பட்டறைகள் மூலம் தங்கள் தரவுகளையும் பகிர்ந்துகொள்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஐ.ஏ.பி.எஸ்.ஈ. உத்தியோகப்பூர்வ இணையதளம்
- ↑ [https://web.archive.org/web/20120330115844/http://www.morth.nic.in/index2.asp?slid=8&sublinkid=5&lang=1 பரணிடப்பட்டது 2012-03-30 at the வந்தவழி இயந்திரம் இந்திய சாலை அமைச்சரக இணையதளம்