சர்வதேச தேதிக்கோடு - நில வரைபடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


The International Date Line around the antimeridian (180° longitude)


சர்வதேச தேதிக்கோடு - நில வரைபடம்

ஒரு இடத்தின் நேரம் அந்த இடத்தின் தீர்க்கரேகையைப் பொறுத்து இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் கால அளவு அதிகாித்துக் கொண்டடே போகும். மேற்கு நோக்கிச் சென்றால் கால அளவு குறைந்து கொண்டே போகும். இதற்குக் காரணம் சூாியன் கிழக்கிலிருந்து மேற்காகச் செல்வதாக தோன்றுவதேயாகும். ஆனால் பூமிதான் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது.

கிரீன்வீச்[தொகு]

கிரீன்வீச் அக்டோபர் பத்தாம் தேதி இரவு 8 மணியாக இருக்கும்போது 450 கிழக்குத் தீர்க்கத்தில் 3 மணி கூடுதலாக இருக்கும் அதாவது இரவு 11 மணியாக இருக்கும். 900 கிழக்குத் தீர்க்கத்தில் இன்னும் 3 மணி கூடதலாக இருக்கும் அதாவது காலை 2 மணியாக இருக்கும். இது அக்டோபர் 11ந் தேதி காலை காலஅளவாகும். 1800 கிழக்குத் தீர்க்கத்தில் இன்னும் 6 மணி நேரம் கூடுதலாக இருக்கும். அதாவது அக்டோபர் 11ந் தேதி காலை 8 மணியாக இருக்கும்.

கிரீன்வீச்சின் மேலே சென்றால் கால அளவு குறைந்து கொண்டே இருக்கும். 900 மேற்குத் தீர்க்கத்தில் 6 மணி குறைவாக இருக்கும். அதாவது அக்டோபர் 10-ம் தேதி பிற்பகல் 2 மணியாக இருக்கும். 1800 மேற்குத் தீர்க்கத்தில் அக்டோபர் 10-ம் தேதி காலை 8 மணியாக இருக்கும். 1800 மேற்குத் தீர்க்கமும், கிழக்குத் தீர்க்கமும் ஒன்றே. 1800 தீர்க்க்ரேகை பெரும்பாலும் கடலின் மேலேயே அமைந்திருக்கிறது. சிற்சில இடங்களில் அது தீவுக்கூட்டங்களின் மேல் அமைந்திருக்கின்றது. ஒரு பொது உடன்பாட்டின்படி ஒரு கோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச தேதிக்கோடு என்றழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 1800 ஐ ஒட்டியே குறிக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தீவுகளை விட்டு கடலின் மேலே குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டைத் தாண்டும் போது செல்லும் திசைக்கேற்ப ஒரு தேதியைக் கூட்டியோ அல்லது குறைத்தோ கொள்ள வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

References "Arctic Expeditions Commanded by Americans". The National Geographic Magazine. 18: 459–468. 1907. Retrieved 4 January 2017. Allen, Jared (11 January 2012), "United States – Russian Maritime Boundary and Exclusive Economic Zones", ArcticEcon, retrieved 4 January 2017 Samoa confirms dateline switch Borneo Post online. Accessed 11 August 2011. "Kiribati's Caroline Island renamed Millennium Island". Pacific Islands Report. September 2002. Retrieved 4 January 2017. "The World Clock-Query Results". Time and date.com. Retrieved 20 May 2016, and click through to the individual stations' pages. With respect to Scott Base, see Ross Dependency.