சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி
நிறுவப்பட்டது | 17 மே 1930 |
---|---|
வகை | சர்வதேச அமைப்பு |
நோக்கம் | மத்திய வங்கி ஒத்துழைப்பு |
தலைமையகம் | |
உறுப்பினர்கள் | 60 மத்திய வங்கிகள் |
Jaime Caruana | |
மைய அமைப்பு | இயக்குநர் குழுமம்[1] |
வலைத்தளம் | www.bis.org |
சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி (Bank for International Settlements) என்பது சுவிட்சர்லாந்து பேசெல் நகரில் 17ம் தேதி மே மாதம் 1930 முதல் இயங்கிவரும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இந்த அமைப்பு உலகில் உள்ள அனைத்து நடுவண் வங்கி வங்கிகளுக்கும் உற்ற துணைவனாக விளங்குகிறது. அனைத்து வங்கிகளுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்துதல், நிதி மற்றும் பணத்துறைகளில் நிலைப்புத்தன்மையை ஏற்படுத்துதல் போன்ற வேலைகளைச் செய்கிறது. இவ்வகைச்செயல்களினால் அனைத்து வங்கிகளுக்கும் இந்த நிறுவனம் நடுவண் வங்கி என்று அழைக்கப்படுகிறது.[2]
சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி நடுவண் வங்கிகள் அனைத்தும் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று விவாதித்து முடிவு செய்து கூறுகிறது. சுவிட்சர்லாந்து பேசெல் நகரைத் தலைமையிடமாக கொண்டிருந்தாளும் இந்த அமைப்பின் பிரதிநிதி அலுவலகங்கள் ஆங்காங், மற்றும் மெக்சிக்கோ நகரம் ஆகிய இடங்களிலும் அமைந்துள்ளது.
வரலாறு[தொகு]
1930 ஆண்டு மே மாதம் 17ம் தேதி சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி செருமனி, பெல்ஜியம், பிரான்சு, ஐக்கிய இராச்சியம், வட அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அரசுகளுக்கிடையிலான உடன்பாடுகளின் மூலம் துவங்கப்பட்டது. [3][4]
இந்த அமைப்பானது முதல் உலகப் போரின் போது உறுவாக்கப்பட்ட வெர்சாய் ஒப்பந்தத்தின் மூலம் உலக நாடுகள் செருமனி மீது திணிக்கப்பட்ட இழப்பீட்டு முடிவுகளை திட்டமிட உதவியது. [5] 1929ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கர் யங் (Owen D) என்பவரின் தலைமையில் டென் ஹாக் நகரில் கூடி யங் ஒப்பந்தம் (Young Young Committee) ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் இதன் இரண்டாவது சர்வதேச வங்கியாளர்கள் மாநாட்டில் ஜனவரி 20 1930ம் ஆண்டு செருமனி நாட்டின் பாடன் பாடன் (Baden-Baden) நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நோக்கங்கள்[தொகு]
- மத்திய வங்கிகளிடையே கூட்டுறவையும், ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துதல்.
- நிதித்துறையின் அதிகாரிகளுக்கிடையே விவாதங்களை ஏற்படுத்துதல்.
- வங்கி மற்றும் நிதித்துறைகளில் ஆராய்ச்சி நடத்துவது.
- மத்திய வங்கிகளிடையே பரிவர்த்தனையில் துணை நிற்பது.
- பன்னாட்டு நிதி சேவைகளின் பாதுகாவலனாக இருப்பது.
மத்திய வங்கிகள் அமைப்பு[தொகு]

இந்த அமைப்பு 58 நடுவண் வங்கிகளுக்கும் பணவியல் கொள்கைகளை வகுக்கிறது. இந்த அமைப்பானது அனைத்துலக நாணய நிதியம்,சர்வதேச ஒரே நேரத்தில் கொள்கை அமைப்பு போன்றவற்றின் மூலமாக பொருளாதாரத்தின் வெளிச்சந்தையைக் கவனித்துக்கொள்கிறது.
உறுப்பு நாடுகள்[தொகு]
இந்த அமைப்பில் 60 உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகள் இணைந்துள்ளன.
![]() |
![]() |
![]() |
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்[தொகு]
- ↑ "Board of Directors". www.bis.org/. 2011-04-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-04-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "About BIS". Web page of Bank for International Settlements. 14 மே 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 17, 2008 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in:
|work=
(உதவி) - ↑ http://treaties.un.org/Pages/showDetails.aspx?objid=0800000280167c31
- ↑ http://www.bis.org/about/index.htm?l=2
- ↑ BIS History - Overview. BIS website. Retrieved 2011-02-13.
மேலும் படிக்க[தொகு]
- LeBor, Adam. Tower of Basel: The Shadowy History of the Secret Bank that Runs the World (2013) excerpt and text search
புற இணைப்புகள்[தொகு]
- BIS website
- Global Banking: The Bank For International Settlements An analysis of the origins and functions of the BIS.
- The Money Club By Edward Jay Epstein, Harpers, 1983.
- Andrew Crockett statement to the IMF.
- An account of the use of reserve policy and other central bank powers in China By Henry C K Liu in the Asia Times.
- Banking with Hitler, Timewatch, Paul Elston, producer Laurence Rees, narrator Sean Barrett (UK), பிபிசி, 1998 (A video documentary about the BIS role in financing Nazi Germany)