இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைபிடிக்கப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர்.

எல்லா வகை இனப்பாகுபாட்டையும் ஒழிக்க முயற்சிசெய்யுமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1966 ஆம் ஆண்டில் மார்ச் 21-ஐ இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது.[1]

தென்னாப்பிரிக்காவில் மனித உரிமைகள் நாளாகக் கடைபிடிக்கப்படும் இப்பொது விடுமுறை நாளில் இனவொதுக்கல் காலத்தில் மக்களாட்சிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடி உயிரிழந்தோர் நினைவுகூரப்படுகின்றனர்.

கருப்பொருள்[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைக் கொண்டுள்ளது:

  • 2010: இனவாதத்தைத் தகுதியிழக்கு[2]
  • 2014: இனவாதம் மற்றும் இனப்பாகுபாட்டுக்கு எதிராக தலைவர்களின் பங்கு[3]
  • 2015: அவலத்திலிருந்து இன்றைய இனப்பாகுபாட்டுக்கு எதிராகக் கற்றல்
  • 2017: புலம்பெயர்வுச் சூழலையும் உள்ளடக்கிய இனவாதத் தனியமைப்பும் வெறுப்புணர்வைத் தூண்டுதலும்

சான்றுகள்[தொகு]