சர்வதேச ஆசிரியர் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வதேச ஆசிரியர் நாள்
மெசுரப் மசுடாட்சு,அர்மேனியன் எழுத்துக்களை கற்றுத் தருதல் (சிலை), யெரெவான்
கடைபிடிப்போர்உலக அளவில் உள்ள ஆசிரியர் நிறுவனங்கள்
நாள்அக்டோபர் 5
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனஆசிரியர் நாள்

சர்வதேச ஆசிரியர் நாள் (World Teachers' Day) உலக ஆசிரியர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆண்டுதோறும் அக்டோபர் 5 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 யுனெஸ்கோ / பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பரிந்துரையில் கையெழுத்திட்டதை நினைவுகூறும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது. [1] [2] சர்வதேச ஆசிரியர் நாள் "உலகின் கல்வியாளர்களைப் பாராட்டுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல்" ஆகியவற்றில் கவனம் செலுத்துவதையும் ஆசிரியர்களுக்கான சிக்கல் மற்றும் கற்பித்தல் தொடர்பான சிக்கல்களைக் கருத்தில் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. [3]

கொண்டாட்டம்[தொகு]

சர்வதேச ஆசிரியர் நாளினைக் கொண்டாடுவதற்காக, யுனெஸ்கோ மற்றும் சர்வதேச கல்வி அமைப்பு (ஈஐ) ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றன. அதன்மூலம் ஆசிரியர்களைப் பற்றிய சிறந்த புரிதலையும், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் அவர்கள் வகிக்கும் பங்கையும் உலகிற்கு வழங்க உதவுகிறது.[4] இந்த நோக்கத்தை அடைய அந்த அமைப்பு ஊடக நிறுவனங்கள் போன்ற தனியார் துறையுடன் இணைந்து செயல்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள்களில் இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது. உதாரணமாக, "ஆசிரியர்களை மேம்படுத்துதல்" என்பது 2017 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள். உயர்கல்வி கற்பித்தல் பணியாளர்களின் நிலை தொடர்பான 1997 யுனெஸ்கோ பரிந்துரையின் 20 வது ஆண்டின் நிறைவை உலக ஆசிரியர் தினம் நினைவுகூறுவதற்காக இந்தப் பிரச்சாரம் நடைபெற்றது. [5]

2018 ஆம் ஆண்டு யுனெஸ்கோ "கல்விக்கான உரிமை என்பது தகுதியான ஆசிரியருக்கான உரிமை" எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. [6] இது மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (1948) 70 வது ஆண்டு நிறைவை நினைவுகூர்கிறது மற்றும் பயிற்சி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாமல் கல்விக்கான உரிமையை உணர முடியாது என்பதை நினைவூட்டுகிறது.

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. http://unesdoc.unesco.org/images/0016/001604/160495e.pdf
  2. "World Teachers' Day - 5 September 2017". UNESCO (in ஆங்கிலம்). 2017-09-13. பார்க்கப்பட்ட நாள் 2017-10-06.
  3. "Frequently Asked and Questions | Education | United Nations Educational, Scientific and Cultural Organization". www.unesco.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-06.
  4. Power, Colin (2014). The Power of Education: Education for All, Development, Globalisation and UNESCO. New York: Springer. பக். 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789812872210. 
  5. http://unesdoc.unesco.org/images/0016/001604/160495e.pdf
  6. "World Teachers' Day 2018 International Conference". UNESCO (in ஆங்கிலம்). 2017-12-14. பார்க்கப்பட்ட நாள் 2018-09-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வதேச_ஆசிரியர்_நாள்&oldid=3288929" இலிருந்து மீள்விக்கப்பட்டது