சர்மிளா தாபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்மிளா தாபா
பிறப்பு25 மார்ச்சு 1990 (1990-03-25) (அகவை 34)
நேபாளம், பரத்பூர், நாராயங்கட்
மற்ற பெயர்கள்வி.ஜே. தாபா
பணிநடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளினி, உதவி பேராசிரியர்
வாழ்க்கைத்
துணை
இரகு. வி (தி. 2019)

சர்மிளா தாபா (Sharmila Thapa) என்பவர் நேபாளி வம்சாவளியைச் சேர்ந்த இந்திய தொலைக்காட்சி தொகுப்புரையாளர் மற்றும் நடிகை ஆவார். [1] இவர் தமிழ் தொலைக்காட்சி துறையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளிகலில் ஒருவராக உள்ளார். [2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

சர்மிளா நேபாளத்தின் பரத்பூரில் உள்ள நாராயங்கட்டில் பிறந்தவர். சென்னை அண்ணா நகரில் உள்ள அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் சுற்றுலா மற்றும் பயண முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

சர்மிளா 2009 ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் சென்னைக்கு, குடிபெயர்ந்தார். வடிவேல் பாலாஜியுடன் இணை தொகுப்பாளராக சர்மிளா தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், இவர் ஆதவனுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சர்மிளா தாபா தமிழ் தொலைக்காட்சித் தொடரான தென்றலில் நடிகையாக அறிமுகமானார். இது தவிர, அஜித், ஜெயம் ரவி போன்ற தமிழ் நடிகர்களுடன் ஷர்மிளா ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆதித்யா தொலைக்காட்சியில் வாங்க சிரிக்கலாம் என்ற காலை நிகழ்ச்சியை சர்மிளா தொகுத்து வழங்குகின்றார். [3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சர்மிளா தாபா தனது நீண்டகால காதலரும் நடன உதவி இயக்குனருமான ரகுவை 2019 சூனில் மணந்தார். [4] [5] இவர்கள் 2020 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை பருவம் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் இந்த இணையர் முதல் இடத்தைப் பிடித்தனர். [6]

திரைப்படவியல்[தொகு]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "A wacky brand of humour, in perfect Tamil".
  2. "Nepali girl makes big as anchor in Tamil channel".
  3. "SHARMILA THAPA AND NEPALI". Archived from the original on 2021-01-11. பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
  4. "TV anchor Sharmila Thapa gets married to longtime boyfriend and assistant choreographer Raghu".
  5. "Arya - Sayyeshaa to Nithya Raam - Gautham: Tamil TV celebs who got married in 2019".
  6. "Suhasini Kumaran shares her excitement over being a part of 'Mr. and Mrs. Chinnathirai 2'; see post".

கூடுதல் இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்மிளா_தாபா&oldid=3553067" இலிருந்து மீள்விக்கப்பட்டது