சர்ப்ப யாகம்

சர்ப்ப யாகம் அல்லது பாம்பு வேள்வி, நாகர்களின் தலைவனான தட்சகன் முதலான நாகர்களை வேள்வித் தீயில் சுட்டு பொசுக்க வேண்டி, அருச்சுனனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான, குரு நாட்டின் மன்னர் ஜனமேஜயனால் செய்யப்பட்ட வேள்வி ஆகும். இந்த வேள்வி குறித்த விரிவான செய்திகள் வியாசர் இயற்றிய மகாபாரத இதிகாசத்தில் ஆதி பருவத்தில் கூறப்பட்டுள்ளது.
பின்னணி
[தொகு]மன்னர் ஜனமேஜயனின் தந்தை பரிட்சித்துக்கு, ஒரு முனி குமாரன், தட்சகன் எனும் நாகம் தீண்டி இறப்பான் என சாபமிடுகிறார். சாபத்தின்படி, பரிட்சித்து தட்சகன் எனும் நாகர் தீண்டி இறந்த பின்னர் அரியணை ஏறிய பரிட்சித்துவின் மகன் ஜனமேஜயனுக்கு, தந்தை பரிட்சித்து இறக்க காரணமான தட்சகன் உள்ளிட்ட அனைத்து நாகர்களை வேள்வித் தீயில் பொசுக்கிக் கொல்ல உதங்கர் எனும் முனிவரின் ஆலோசனையின்படி, சர்ப்ப வேள்வி செய்கிறார்.
சர்ப்ப வேள்வியின் போது நாகர்கள் பலர் வேள்வித் தீயில் விழுந்து மடிகிறர்கள். இறுதியில் தட்சகன் வேள்வித் தீயில் விழும் போது, நாக கன்னி ஜரத்காருவுக்கும், ஜரத்காரு எனும் முனிவருக்கும் பிறந்த ஆஸ்திகர் எனும் முனி குமாரன் ஜனமேஜயனிடம் சர்ப்ப வேள்வியை நிறுத்தமாறு வரம் கேட்கிறான். அவ்வாறே மன்னர் ஜனமேஜயனும் சர்ப்ப யாகத்தை நிறுத்தியதால், தட்சகன் உயிருடன் மீண்டான்.[1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- Buck, William (2000). Ramayana. University of California Press. ISBN 978-0-520-22703-3.
- Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. ISBN 0-8426-0822-2.
- Pillai, Govinda Krishna (1960). Traditional History of India: (a Digest). Kitab Mahal.
- Swami, Bhaktivejanyana (28 January 2013). Ithihaasa: The Mystery of His Story Is My Story of History. AuthorHouse. ISBN 978-1-4772-4273-5.
- Taraphadāra, Mamatājura Rahamāna; Dhaka, University of (1999). Husain Shahi Bengal, 1494–1538 A.D.: A Socio-political Study. University of Dhaka.