சர்பூரியா
கிருசுணாநகர் சர்பூரியா | |
| மாற்றுப் பெயர்கள் | সরভাজা |
|---|---|
| தொடங்கிய இடம் | இந்தியா, பங்களாதேசு |
| பகுதி | பெங்கால் |
| முக்கிய சேர்பொருட்கள் | சனா, கீர்(பெங்காலி இனிப்புகள்), சார் |
| இதே போன்ற உணவுகள் | சர்பசா |
சர்பூரியா ( Sarpuria ) என்பது வங்காளத்தில் தோன்றிய ஒரு இனிப்பு வகையாகும். இது இந்தியாவின் கிருசுணநகரின் ஒரு சிறப்பு இனிப்பாகும். பங்களாதேசின் கிராமப்புறங்களிலும் சர்பூரியா ஒரு பிரபலமான இனிப்பாகும்.
தோற்றம்
[தொகு]சர்பூரியாவின் தோற்றத்தைப் பற்றி இரண்டு முக்கியக் கதைகள் உள்ளன. முதல் கதை, அதை 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதத் தலைவரான சைதன்யருடன் தொடர்புபடுத்துகிறது. கிருசுணதாச கவிராசரால் எழுதப்பட்ட 16 ஆம் நூற்றாண்டு நூலான சைதன்ய சரிதாம்ருதத்தின்படி, சைதன்யருக்குப் படைக்கப்பட்ட இனிப்புகளில் சர்பூரியாவும் ஒன்றாகும்.[1]
மற்றொரு கதையின்படி, சர்பூரியாவின் உருவாக்கியவர் கிருசுணநகரைச் சேர்ந்த ஆதார் சந்திர தாசு ஆவார்.[2] ஒரு கூற்றின்படி, சர்பூரியாவின் உருவாக்கியவர் இவரது தந்தை சுருகுமார் தாசு ஆவார். இரவில், யாருக்கும் தெரியாமல், இவர் பன்னீர், சுருக்கப்பட்ட பால் மற்றும் பாலேடு ஆகியவற்றைக் கொண்டு சரபுரியா மற்றும் சர்வாசாவைத் தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. மறுநாள் காலையில், அவற்றை தலையில் சுமந்துகொண்டு, இவர் இவற்றை விற்பனை செய்வார்.[3] ஆதார் சந்திரர் தனது தந்தையிடமிருந்து இனிப்புகள் செய்யக் கற்றுக்கொண்டார். 1902 ஆம் ஆண்டில், தற்போதைய அனந்த கரி மித்ரா சாலையில் உள்ள நாடியார் பாராவில் அவர் ஒரு புகழ்பெற்ற இனிப்புக் கடையை நிறுவினார்.[3]
புவியியல் குறியீட்டு நிலை
[தொகு]இந்த இனிப்பின் பிறப்பிடமாக சர்பூரியாவுக்கு புவிசார் குறியீடு பதிவு கிடைக்கும். மேற்கு வங்க அரசு 25 மே 2017 அன்று புவிசார் குறியீடு பதிவு விவரங்களை அனுப்பியது. [4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Banerji, Chitrita (2006) [First published 2001]. The Hour of the Goddess: Memories of Women, Food, and Ritual in Bengal. Penguin Books India. pp. 111–112. ISBN 978-0-14-400142-2. Retrieved 14 December 2017.
- ↑ Halder, Susmeet (31 July 2014). Ananda Bazar (Calcutta). http://www.anandabazar.com/district/nodiamurshidabbadAE-1.55205.
- 1 2 Sengupta, Sujit (May 2011) (in bn) இம் மூலத்தில் இருந்து 4 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140904144857/http://calcuttaweb.com/bengali/articles/grambanglaBE.
- ↑ Ghosal, Sutanuka (17 October 2016). "Bengali sweets Sarpuria, Sarbhaja may get GI tag". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bengali-sweets-sarpuria-sarbhaja-may-get-gi-tag/articleshow/54893672.cms.
- ↑ "Application Details: Krishnagar Sarpuria". Geographical Indications Registry. Archived from the original on 8 May 2021.