உள்ளடக்கத்துக்குச் செல்

சர்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்தா
மாற்றுப் பெயர்கள்ஜோர்தா, ஜர்தா
பரிமாறப்படும் வெப்பநிலைஈற்றுணவு
தொடங்கிய இடம்முகலாயப் பேரரசு
பகுதிஇந்தியத் துணைக்கண்டம்
தொடர்புடைய சமையல் வகைகள்பாக்கித்தான், இந்திய உணவுமுறை, வங்காளதேசம்
முக்கிய சேர்பொருட்கள்அரிசி, உலர்திராட்சை, ஏலக்காய், குங்குமப்பூ, பசுங்கொட்டை/வாதுமை
வேறுபாடுகள்முடஞ்சன்

சர்தா (ஆங்கிலம்: Zarda; இந்தி: ज़र्दा ஜர்தா, உருது: زردہ zardā, வங்காளம்: জর্দা jôrdā ) என்பது இந்திய துணைக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பாரம்பரிய வேகவைத்த அரிசி இனிப்பு உணவாகும். இது குங்குமப்பூ, பால், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் இதில் ஏலக்காய், திராட்சை, பிசுதா அல்லது பாதாம் ஆகிவைச் சேர்த்து சுவைக்கப்படுகிறது.[1][2] 'சர்தா' என்ற பெயர் 'மஞ்சள்' என்று பொருள்படும் 'சர்ட்' زرد என்ற பாரசீக வார்த்தையிலிருந்து வந்தது.[2] ஏனெனில் அரிசியில் சேர்க்கப்படும் உணவு வண்ணம் அதற்கு மஞ்சள் நிறத்தை அளிக்கிறது. சர்தா பொதுவாக உணவுக்குப் பிறகு பரிமாறப்படுகிறது. இந்திய துணைக் கண்டத்தில், திருமணங்கள் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் சர்தா ஒரு பிரபலமான இனிப்பாக இருந்தது; இன்னும் உள்ளது. இது ஒரு பாரம்பரிய ஈரானிய இனிப்பு வகையான சோலெசார்ட் மற்றும் பாரம்பரிய துருக்கிய இனிப்பு வகையான ஜெர்டே ஆகியவற்றைப் போன்றது. .

பெரும்பாலும் பாக்கித்தானில், மஞ்சள் நிறத்திற்கு பதிலாக, அரிசி தானியங்கள் பல வண்ணங்களில் இருப்பதால் பல உணவு வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. கூடுதலாக, கோயா, மிட்டாய் பழங்கள் (முரப்பா மற்றும் கொட்டைகள்) ஆகியவை மங்களகரமான சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படும் சர்தாவின் இன்றியமையாத உணவுச் சேர்க்கைப் பொருட்களாக உள்ளன. திராட்சை மற்றும் பிற உலர்ந்த பழங்களின் பிரபலமான பயன்படுத்தப்படுகிறது.

முகலாய இந்தியாவினைச் சேர்ந்த சர்தாவில் 'முடஞ்சன்' என்று அழைக்கப்படும் சிறிய வறுத்த இனிப்பு துண்டுகள் சேர்க்கப்பட்டன. இந்த உணவு பேரரசர் ஷாஜகானுக்கு மிகவும் பிடித்தது. மேலும் இவரது வேண்டுகோளின் பேரில் அடிக்கடி தயாரிக்கப்பட்டது. சிறப்பு விருந்துகளில் விருந்தினர்களுக்காக இந்த அரிசி உணவு தயாரிக்கப்பட்டது.

ஈராக்கின் மெசொப்பொத்தேமிய மக்களும் இந்த உணவை தயாரிக்கிறார்கள் (இதே பெயரில்). பொதுவாக நோன்பின் போது உண்ணாவிரதம் இருக்கும்போது தயாரிக்கப்படுகிறது. இதனால் பால் பொருட்கள் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Zarda Recipe (Indian Sweet Rice)". The Huffington Post. 17 November 2016. Archived from the original on 1 February 2017. Retrieved 19 January 2017.
  2. 2.0 2.1 "Mama’s Punjabi Recipes- Mithe Chawal (Sweet Rice)" பரணிடப்பட்டது 4 பெப்ரவரி 2019 at the வந்தவழி இயந்திரம். Indo American News. 12 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்தா&oldid=4472981" இலிருந்து மீள்விக்கப்பட்டது