சர்ச்சில் நீர்வீழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்ச்சில் நீர்வீழ்ச்சி
பெரு நீர் வீழ்ச்சி
ஆள்கூறு53°35′39.44″N 64°18′28.05″W / 53.5942889°N 64.3077917°W / 53.5942889; -64.3077917ஆள்கூறுகள்: 53°35′39.44″N 64°18′28.05″W / 53.5942889°N 64.3077917°W / 53.5942889; -64.3077917[1]
வகைபிரிக்கப்பட்ட அடுக்குப் பகுதி
மொத்த உயரம்245 அடி (75 மீ)
நீர்வழிசர்ச்சில் ஆறு
ஒரு பெரும் நீர்வீழ்ச்சியை செதுக்கிய ஒளிப்படம் அண். 1890
நீா்வீழ்ச்சியின் மேலே உள்ள சுழல்கள் அண். 1890
1960 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சர்ச்சில் நீர்வீழ்ச்சி நீர்மின்சக்தி திட்டம்
2008 ஆம் ஆண்டில் சர்ச்சில் நீர்வீழ்ச்சி, அதன் பெரும்பாலான நீர் வழிமாற்றிவிடப்பட்ட பிறகு

சர்ச்சில் நீர்வீழ்ச்சி (Churchill Falls) என்பது ஒரு மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும். இது கனடாவில் உள்ள நியூஃபவுன்லாந்து மற்றும் லேப்ரடார் வழி பாய்கின்ற சர்ச்சில் நதிக்கரையில் உயரமான பகுதியில் அமைந்துள்ளது. இது கனடாவில் உள்ள மிகச்சிறந்த இயற்கை வளங்களின் ஒன்றாக கருதப்படுகிறது. இதிலிருந்து ஒரு பிரிவானது அருவி தோன்றும் இடத்தில் பல அடுக்குகளின் இடையே பாய்கிறது. இதன் விளைவாக ஒரு சிறிய ஓடை பழங்காலத்தில் அந்த அமைந்த ஆற்றங்கரையின் வழியாக பாய்ந்து செல்கிறது அது அங்குள்ள பாறைகளில் மோதி துளித்துளிகளாக சிதறிப் பாய்கிறது.

பெயர்கள்[தொகு]

ஜான் மெக்லீன் இந்த நீர் வீழ்ச்சியை பேரருவி என்றே அழைத்தார்.[2] சர்ச்சில் நதிக்கரை அக்காலத்தில் |பூர்வகுடி மக்களால் பேராறு என்றே அழைக்கப்பட்டது. அது இன்றளவும் தொடர்கிறது. இந்தப் பகுதியில் வாழ்ந்து வரும் இன்னு என்ற பூர்வகுடி மக்கள் அந்த நீர்வீழ்ச்சிக்கு பட்சிசேட்ஸ்சவனா என்ற ஒரு தனிப்பெயரையும் கொண்டிருந்தனர். கேப்டன் வில்லியம் மார்டின் 1821 ஆம் ஆண்டு லேப்ரடார் ஆளுநர் சார்லஸ் ஆமில்டனின் நினைவாக நீர்வீழ்ச்சியின் பெயரை ஆமில்டன் நீர்வீழ்ச்சி என்று மாற்றினார். இருந்தாலும் நீர்வீழ்ச்சியானது பேரருவி அல்லது மெக்லீன் அருவி எனவே அழைக்கப்பட்டது.[3][4] பிப்ரவரி முதல் நாள் 1965 ஆம் ஆண்டில் கனடிய மாகாணமான நியூபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடாரின் முதன்மை அமைச்சர் ஜோய் ஸ்மால்வுட் என்பவர் இந்த நீர்வீழ்ச்சியை நீர்மின்சக்தி திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ள ஒப்புதலளித்த பிரிட்டனின் முன்னாள் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சிலின் பெயரைச் சூட்டினார்.

வரலாறு[தொகு]

இந்த நீர்வீழ்ச்சி அங்குள்ள பழங்குடி மக்களுக்கு ஒரு தனித்துவமிக்க அடையாளமாகும். அவர்கள் இந்த நீர்வீழ்ச்சியை அடைவதை மரணத்தின் அடையாளமாக கருதினர்[5] and maintained a strong taboo against visiting into the early 20th century.[6]. 1839 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து மற்றும் கனடா வணிகர்களால் அமைந்த ஒரு குழுவானது ஒரு நதிவழிப்பாதையை வடமேற்கு லாப்ரடர் வழியிலும் தென்கிழக்கு லாப்ரடர் வழியிலும் அமைப்பதற்கு வேண்டுகோள் விடுத்தது. இதன் மூலம் ஐரோப்பியர்கள் அந்த இடத்தை வந்தடைவதற்கு பேருதவி புரியும் என்று அவர்கள் கருதினர். அக்குழுவின் தலைவர் ஜான் மெகல்லன், அந்த நீர்வீழ்ச்சியால் சர்ச்சில் நகரத்தை அடையும் நேர்பாதை தடுக்கப்படுவதைக் கண்டு பின்வாங்கினாலும் நீர்வீழ்ச்சியின் மகத்துவம் அவரைப் பெரிதும் கவர்ந்தது.[6]

1894 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஆல்பர்ட் பீட்டர் லோ அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்து சேர்ந்தார். 1915 ஆம் ஆண்டு நீர் மின் சக்தியை உருவாக்குவதற்கான திட்டமொன்று உருவாக்கப்பட்டது. ஆனால், அது மிகுந்த பொருட் செலவினை உண்டாக்கும் என்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் அங்கு இரும்புத் தாது எடுப்பதற்காகச் சுரங்கங்களை அமைக்கப்பட்டதால் 1954இல் அத்திட்டம் செயலாற்றப் படுவதற்கு உரியதாக அமைந்தது. 1967ஆம் ஆண்டில் இத்திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. 1970ஆம் ஆண்டு இதன் கட்டுமானப்பணி முடிவு பெற்றது. சர்ச்சில் நதியின் நீர் இதன் மூலம் ஒரு நீர்தேக்கத்திற்கு திருப்பப்பட்டது. அந்த நீர்த்தேக்கத்தில் நீர்மட்டமானது அதிகபட்ச அளவினை எட்டியபிறகு உபரி நீரானது நீர்வீழ்ச்சியில் விடப்படுகிறது. அச்சமயத்தில் நீர்வீழ்ச்சியின் விழும் நீரின் அளவு, நீர்வீழ்ச்சியின் பழைய அளவில் 10% மட்டுமாகவே உள்ளது. இவ்வாறு உபரி நீரானது நீர்வீழ்ச்சியில் விடப்படுவது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கிறது.[7]

பெருமைகள்[தொகு]

அந்த நதிக்கரைக்கு அருகே உள்ள ஒரு நகரத்திற்கு நீர்வீழ்ச்சியின் பெயரானது சூட்டப்பட்டுள்ளது[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GeoNames Query - Churchill Falls: Query Record Details". Natural Resources Canada. Government of Canada. 2008-11-09. 2011-06-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. Butts, Ed (1 July 2015), "Guelph Man Key in Saving Rupert's Land for Canada", Guelph Mercury, Guelph: Torstar.
  3. Low (1896), ப. 142–3.
  4. Carter, Dave, "Hidden Treasures: Explorer Made Home in Guelph", Guelph Mercury, Guelph: Torstar.
  5. 5.0 5.1 James Marsh (2010). "Churchill Falls". The Canadian Encyclopedia. June 9, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  6. 6.0 6.1 Bryant, Henry Grier (1892), A Journey to the Grand Falls of Labrador, Philadelphia: Geographical Society of Philadelphia.
  7. "Water will be released over Churchill Falls for 4th time in about 30 years". CBC. 14 July 2019 அன்று பார்க்கப்பட்டது.