சர்ச்சிங் ஃபார் பாபி ஃபிஷர்
சர்ச்சிங் ஃபார் பாபி ஃபிஷர் Searching for Bobby Fischer | |
---|---|
இயக்கம் | ஸ்டீவன் ஜைலியன் |
தயாரிப்பு | வில்லியம் ஹார்பெர்க் |
திரைக்கதை | ஸ்டீவன் ஜைலியன் |
இசை | ஜேம்சு கோர்னர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கான்ராடு ஹால் |
படத்தொகுப்பு | வெய்ன் வார்மன் |
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஆகத்து 11, 1993 |
ஓட்டம் | 109 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $12 million[1] |
மொத்த வருவாய் | $7,266,383 |
இன்னசென்ட் மூவ்ஸ் என்ற பெயரில் ஐக்கிய இராச்சியத்தில் வெளியான சர்ச்சிங் ஃபார் பாபி ஃபிஷர் என்ற படம் 1993 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். இதில் ஸ்டீவன் ஜைலியன் இயக்குனராக அறிமுகமாகி எழுதி இயக்கியுள்ளார். மேக்ஸ் பொமராங்க் நடிகராக அறிமுகமான இப்படத்தில் ஜோ மாண்டெக்னா, ஜோன் ஆலன், பென் கிங்ஸ்லி, லாரன்ஸ் பிஷ்பர்ன் ஆகியோர் நடித்தனர். இது செங்கள சதுரங்க வீரர் ஜோசுவா வைட்ஸ்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் ஜோசுவாவின் தந்தை பிரெட் வைட்ஸ்கின் இதே பெயரில் எழுதிய புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது. 66வது அகாதெமி விருதுகளில் சிறந்த ஒளிப்பதிவிற்காக இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.
கதைச் சுருக்கம்[தொகு]
இப்படம் அமெரிக்க சதுரங்க வீரரான பாபா ஃபிரசரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக் கொண்டது. பாபி ஃபிரசர் தன் எட்டு வயதில் ஒரு பொதுப் பூங்காவில் ஒரு ஏதிலி மனிதருடன் முதன் முதலில் விதிகள் ஏதும் தெரியாமல் தன் முதல் சதுரங்க காய் நகர்த்தலை தொங்குகிறார். சதுரங்கத்தின் மரபார்ந்த விதிகளைப் புறந்தள்ளி விளையாடந்துணிந்தவர் இவர். தனக்கு முறையாக சதுரங்கம் சொல்லித்தந்த ஆசிரியருடன் முரண்படுகிறார். பின்னர் தனக்கான ஆடுமுறையை, தானே எப்படிக் கண்டறிகிறார். எப்படி உலக வாகையராக ஆகிறார் என்பதே கதையாகும்.
நடிகர்கள்[தொகு]
- ஜோஷ் வைட்ஸ்கினாக மேக்ஸ் பொமராங்க்
- ஃப்ரெட் வைட்ஸ்கினாக ஜோ மாண்டெக்னா
- போனி வைட்ஸ்கினாக ஜோன் ஆலன்
- புரூஸ் பண்டோல்பினியாக பென் கிங்ஸ்லி
- "வின்னி" வின்சென்ட் லிவர்மோராக லாரன்ஸ் பிஷ்பர்ன்
- ஜொனாதன் போவாக மைக்கேல் நிரன்பெர்க்
- ஜொனாதனின் ஆசிரியராக ராபர்ட் ஸ்டீபன்ஸ்
- கலேவாக டேவிட் பேமர்
- மோர்கன் பெஹ்மேவாக ஹால் ஸ்கார்டினோ
- ஆசா ஹாஃப்மேனாக ஆஸ்டின் பெண்டில்டன்
- உருசிய வீரராக வசெக் சிமெக்
- டுனாஃபிஷ் தந்தையாக வில்லியம் எச். மேசி
- விளையாட்டுப்போட்டி இயக்குநராக டான் ஹெடயா
- ஜோஷின் பள்ளி ஆசிரியராக லாரா லின்னி
- டோனி ஷல்ஹூப் செஸ் கிளப் வீரராக
இப்படத்தில் பின்வரும் சில பிரபல சதுரங்க வீரகளான அஞ்சலினா பெலகோவ்ஸ்காயா, ஜோயல் பெஞ்சமின், ரோமன் டிஜிண்ட்சிசாஷ்விலி, கம்ரன் சிராசி, ஜோசுவா வைட்ஸ்கின், புரூஸ் பண்டோல்பினி, வின்சென்ட் லிவர்மோர், ரஸ்சல் கார்பர் போன்றோர் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளனர். செஸ் மாஸ்டர் ஆசா ஹாஃப்மேனாக ஆஸ்டின் பென்டில்டன் நடித்தார்; உண்மையான ஹாஃப்மேனுக்கு அவர் தன்னை சித்தரித்த விதத்தில் திருப்தி இல்லை. சதுரங்க நிபுணரான போ மெக்ளிண்டன், ஒரு பூங்காவில் வழக்கமாக இருப்பவராக, படம் முழுவதும் காணப்படுகிறார். சதுரங்க வீரர் பால் பென்கோ நடித்த காட்சிகள் படத்தில் இருக்க வேண்டும் ஆனால் அவரது பகுதி வெட்டப்பட்டது. வைட்ஸ்கினின் உண்மையான தாய் மற்றும் சகோதரி போன்றோர் சிறப்புத் தோற்றத்தில் உள்ளனர். பாபி பிஷ்ஷர் செய்திப்படக் காட்சிகளில் தோன்றுகிறார்.
வரவேற்பு[தொகு]
புத்தகமும், திரைப்படமும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. [2] [3] [4]
குறிப்புகள்[தொகு]
- ↑ Eric G. Carter (1993). "1993–94 Film Releases". July 29, 2001 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 12, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ The Spectator, April 8, 1989, pp. 30–31
- ↑ "Searching for Bobby Fischer (Josh Waitzkin) by Edward Winter". www.chesshistory.com. 2023-01-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ The Observer, April 2, 1989, p. 45
வெளி இணைப்புகள்[தொகு]
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Searching for Bobby Fischer
- ஆல்மூவியில் Searching for Bobby Fischer
- Searching for Bobby Fischer at Box Office Mojo
- Updated article from 2006 by award-winning Esquire (UK) journalist Eamonn O'Neill