சர்கோதா மாவட்டம்
சர்கோதா மாவட்டம்
ضلع سرگودھا | |
|---|---|
மாவட்டம் | |
எம் 2 நெடுஞ்சாலை | |
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சர்கோதா மாவட்டத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 32°05′N 72°40′E / 32.08°N 72.67°E | |
| நாடு | |
| மாகாணம் | பஞ்சாப் |
| நிறுவிய ஆண்டு | 1893ல் ஷாப்பூர் மாவட்டமாக |
| தலைமையிடம் | சர்கோதா |
| வருவாய் வட்டங்கள் | 7 |
| அரசு | |
| • நிர்வாகம் | மாவட்டக் குழு |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 5,854 km2 (2,260 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 14வது (பஞ்சாபில்) |
| மக்கள்தொகை | |
| • மாவட்டம் | 43,34,448 |
| • தரவரிசை | 9வது (பஞ்சாபில்) |
| • அடர்த்தி | 740/km2 (1,900/sq mi) |
| அடர்த்தி தரவரிசை | 19வது (பஞ்சாபில்) |
| • நகர்ப்புறம் | 16,09,587 (37.13%) |
| • நாட்டுப்புறம் | 27,24,861 (62.87%) |
| எழுத்தறிவு | |
| • சராசரி எழுத்தறிவு | 66.73% |
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 40100 |
| இடக் குறியீடு | 048 |
| நாடாளுமன்ற கீழவைத் தொகுதிகள் | சர்கோதா தொகுதி எண்கள் 82, 83, 84, 85 மற்றும் 86 |
| நாடாளுமன்றத் கீழவைத் தொகுதிகள் | மொத்தம் 5 |
| பஞ்சாப் சட்டமன்றத் தொகுதிகள் | மொத்தம் 10 |
| இணையதளம் | sargodha |
சர்கோதா மாவட்டம் (Sargodha District), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் சர்கோதா ஆகும். 5,864 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில்[3]கோதுமை, அரிசி, கரும்பு மற்றும் எலுமிச்சை & ஆரஞ்சு அதிகம் பயிரிடப்படுகிறது.[4]2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 43,34,448 ஆகும்.[5]இம்மாவட்டம் தேசிய அசெம்பிளிக்கு (தொகுதி எண்கள்: 82, 83, 84, 85 மற்றும் 86) 5 தொகுதிகளையும், பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்திற்கு 10 தொகுதிகளையும் கொண்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]சர்கோதா மாவட்டம் பல்வால், பெரா, கோட் மோமின், சகிவால், சர்கோதா, ஷாப்பூர் மற்றும் சிலான்வாலி என 7 வருவாய் வட்டங்களையும், 161 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.[6]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,84,321 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 43,34,448 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 102.53 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 66.73%.[1][7]10 அகவைக்குட்பட்ட குழந்தைகள் 1,089,643 பேர் உள்ளனர்.[8]நகர்புற மக்கள் தொகை 16,09,587 (37.13%) மற்றும் கிராமப்புற மக்கள் தொகை 27,24,861 (62.87%) ஆக உள்ளது.[1]
சமயம்
[தொகு]- இசுலாமியர்கள் - 98.03%[9]
- கிறித்தவர்கள் - 1.86%
- பிற சமயத்தவர்கள் - 0.11%
மொழிகள்
[தொகு]இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக பஞ்சாபி மொழி பேசுகின்றனர்.
- பஞ்சாபி மொழி 90.79%
- உருது 7.61%
- பஷ்தூ மொழி 1.26%
- பிற மொழிகள் 0.34%
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
- ↑ "District Overview – Sargodha". Punjab Police, Government of the Punjab website. 4 January 2008. Archived from the original on 4 January 2008. Retrieved 22 February 2023.
- ↑ Mahmood, Amjad (21 December 2020). "Sarghoda's citrus claim to fame" (in en). Dawn (newspaper). https://www.dawn.com/news/1596833.
- ↑ Sargodha District Population 2023
- ↑ "Tehsils & Unions in the District of Sargodha". National Reconstruction Bureau, Government of Pakistan website. Archived from the original on 9 February 2012. Retrieved 22 February 2023.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics. 2024-07-25. Retrieved 2024-07-25.