உள்ளடக்கத்துக்குச் செல்

சரோஜினி ஹெம்ப்ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரோஜினி ஹெம்ப்ராம்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
3 ஏப்ரல் 2014 – 2 ஏப்ரல் 2020
பின்னவர்சுஜீத் குமார்
தொகுதிஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1959 (1959-10-01) (அகவை 64)
இராய்ரங்க்பூர் , மயூர்பஞ்சு மாவட்டம் ஒடிசா
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
துணைவர்பாகிரதி நாயக்
As of December 9, 2014

சரோஜினி ஹெம்ப்ராம் (Sarojini hembram, பிறப்பு: 1 அக்டோபர் 1959) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். 2009ஆம் ஆண்டில் ஒடிசா சட்டமன்றத்தின் பாங்கிரிபோசி தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஒடிசா அரசாங்கத்தில் துணி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கான அமைச்சரானார். இவர் ஒடிசாவிலிருந்து 2014ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

சுயசரிதை

[தொகு]

சரோஜினி ஹெம்ப்ராம், ஒடிசாவின் மயூர்பஞ்சு மாவட்டத்தின் ராயரங்க்பூர் நகரில் பிறந்தார். இவர் சைதன்யா பிரசாத் மஜி என்பவருக்கும், தமயந்தி மஜி ஆகியோருக்கும் மகளாகப் பிறந்தார். இவர் உத்கவ் சங்கித் மகாவித்யாலயாவில் இசையில் முதுகலை பட்டம் பெற்றார். இதற்குமுன் பாரிபாய்டுயுடா கே. என். ஜி. உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். இவரது கணவர் பாகீரதி நாயக் ஒரு சமூக சேவையாளர் ஆவார்.[4][5] 1990 முதல்-1999 ஆண்டு வரை, சரோஜினி ஹெம்ப்ராம் புவனேசுவரில் உள்ள நஹர்கந்தா, ஜெயதேவ் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இசைத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார். இவர் சந்தாளி, இந்தி, ஆங்கிலம், ஒடியா மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர். 1996ஆம் ஆண்டில், மயூர்பஞ்ச் மாவட்ட நலத்துறையின் பிரதிநிதியாக பணியாற்றினார். 2006ஆம் ஆண்டில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கட்டாக் பிரதேச அலுவலகத்தின் ஆயுள் காப்பீடுதார்களின் அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ஒரிசாவின் மாநில வள மையம் (வயது வந்தோர் கல்வி) திட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டார். 1983 முதல் கட்டாக்கின் அனைத்திந்திய வானொலியில் குரல் நாட்டுப்புற பாடகர்/கலைஞருக்கான நிகழ்ச்சிகாக இவர் அறியப்படுகிறார். ஒரு கலைஞரான இவர் பழங்குடி கலாச்சாரம் தொடர்பான பல கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர் கலைஞரும், பின்னணி பாடகியும், நடிகையும், தயாரிப்பு நிர்வாகியுமாகவும் இருக்கிறார்.[6]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் 2008ஆம் ஆண்டில், மயூர்பஞ்ச் மாவட்ட பிஜு ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்த பதவியில் ஒரு வருடம் பணியாற்றினார். அடுத்த ஆண்டு (2009) ஒடிசா சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பு, இவரை சட்டமன்ற போட்டியாளராக கட்சி அறிவித்தது. எனவே, இவர் அரசியலில் சேர 2009ல் தனது அரசு வேலையை விட்டு விலகினார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜனதா முக்தி மோர்ச்சா கட்சியின் பலம் மிக்க சுதாம் மராண்டியை தோற்கடித்து பாங்கிரிபோசி (தனி) தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • 2010ஆம் ஆண்டில், இவர் பழங்குடியினர் ஆலோசனைக் குழு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு தொடர்பான அலுவல் குழு மற்றும் ஒடிசா சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் வசதிகள் குறித்த துணைக் குழுவில் உறுப்பினரானார். மேலும், ஒடிசா சட்டமன்றத்தில் மாநில அளவிலான உயர்சக்தி விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு (எஸ்.டி/எஸ்சி) மற்றும் சுகாதார நிலைக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். இவர் ஒடிசாவின் பாரத் சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகளின் துணைத் தலைவரானார்.
  • 2011ஆம் ஆண்டில், ஒடிசா அரசாங்கத்தின் மாநில அளவிலான தேர்வுக் குழுவில்- பஞ்சாயத்து ராஜ் துறையில் உறுப்பினரானார்.
  • 2012 முதல் 2014 வரை ஒடிசா அரசாங்கத்தில் மாநில அமைச்சராக (சுயாதீன பொறுப்பு), ஜவுளி, கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் துறையில் பணியாற்றினார்.
  • 2014இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலை 2014இல், புவனேசுவரத்தில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) உறுப்பினராகவும், 2014 செப்டம்பரில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் குழுவின் உறுப்பினராகவும் ஆனார்.
  • மே 2015 முதல் ஏப்ரல் 2016 வரை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் நலன் குறித்த குழு உறுப்பினராக மாநிலங்களவையில், தனது தாய்மொழி சந்தாளி மொழி மூலம் முதன்முறையாக தனது வட்டார பிரச்சினையை எழுப்பினார் மற்றும் சிறுபான்மை மொழிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வரலாற்றைக் பதிவுசெய்தார்.[7]

மேற்குறிப்புகள்

[தொகு]
  1. "Sarojini Hembram first woman MLA from Odisha elected to RS". The Economic Times. 8 February 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  2. "Odisha 'focus state' at 33rd India International Trade Fair". Deeptiman Tiwary. The Times of India. 13 November 2013. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  3. "BJD wins 3 Rajya Sabha seats, Congress gets one". Business Standard. February 7, 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  4. https://www.india.gov.in/my-government/indian-parliament/smt-sarojini-hembram
  5. https://www.elections.in/political-leaders/sarojini-hembram.html
  6. https://www.oneindia.com/politicians/sarojini-hembram-71639.html
  7. https://m.timesofindia.com/city/bhubaneswar/santhali-debuts-in-rs-with-hembram-speaking/amp_articleshow/72407272.cms

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜினி_ஹெம்ப்ராம்&oldid=3944402" இலிருந்து மீள்விக்கப்பட்டது