சரோஜினி மகிசி
சரோஜினி பிந்துராவ் மகிசி (Sarojini Bindurao Mahishi 3 மார்ச் 1927 - 25 ஜனவரி 2015) ஓர் இந்திய ஆசிரியரும், வழக்கறிஞரும், ஆர்வலரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1962 மற்றும் 1980க்கும் இடையில் நான்கு முறை தார்வாட் வடக்கு தொகுதியிலிருந்து [1] 1983 இல் இவர் மாநிலங்களவைக்கு ஜனதா கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[சான்று தேவை]
மகிசி கர்நாடக அரசாங்கத்தினால் 1983இல் இந்தியாவில் இட ஒதுக்கீடு வரையறைகளுக்கு பரிந்துரைப்பதில் அமைக்கப்பட்ட் குழுவில் இடம்பெற்றதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். 1986இல் பரிந்துரைகளைச் சமர்ப்பித்த குழு, கர்நாடகாவில் அதிக சதவீத வேலைவாய்ப்பு உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.[2]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
சரோஜினி மகிசி 3 மார்ச் 1927 அன்று பிரித்தானிய இந்தியாவின் மும்பை மாகாணம் தார்வாடுவில் கமலாபாய் மற்றும் பிந்துராவ் மகிசி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். எட்டு குழந்தைகளில் இவர் இரண்டாவது குழந்தை ஆவார்.[3] இவரது தந்தை பிந்துராவ் ஒரு முன்னணி வழக்கறிஞரும் சமசுகிருத அறிஞரும் ஆவார். சரோஜினி சாங்கலியில் உள்ள வில்லிங்டன் கல்லூரியில் சேருவதற்கு முன்பு தார்வாட்டின் அரசுப் பள்ளிகளில் படித்தார். பெல்காமில் உள்ள ராஜா லக்கம்கவுடா சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டமும், சமசுகிருத மொழியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[4]
தொழில் வாழ்க்கை[தொகு]
மகிசி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மாநில சமூக நல வாரியத்தில் சேருவதற்கு முன்பு சில ஆண்டுகள் சமசுகிருதம் மற்றும் சட்டத்தை தார்வாட்டில் உள்ள ஜனதா சிக்சனா சமிதி கல்லூரியில் கற்பித்தார்.[4]
இலக்கிய நடவடிக்கைகள்[தொகு]
மகிசி பல கன்னட மற்றும் மராத்தி படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்தார். இவற்றில் மிக முக்கியமானது கன்னடக் கவிஞர் டிவி குண்டப்பாவின் மங்கு திம்மனா காகாவின் மொழிபெயர்ப்பு ஆகும்.
வகித்த பதவிகள்[தொகு]
மாநிலங்களவை உறுப்பினர், மாநிலங்களவையின் துணைத் தலைவர் (1982-84) [5], தார்வாட் வடக்கு தொகுதியில் இருந்து 4 முறை மக்களவை உறுப்பினர் [6][7], சன்சாடியா இந்தி பரசத் தலைவர், தில்லி கர்நாடக சங்கத்தின் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
சரோஜினி மகிஷி அறிக்கை[தொகு]
இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே 1983இல் நியமிக்கப்பட்ட அரசாங்கக் குழுவிற்குத் தலைமை தாங்குமாறு மகிசியினைக் கேட்டுக் கொண்டார்[8][9] பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினை ஒதுக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. கன்னட ரக்சணா வேதிகே போன்ற கன்னட குழுக்கள் முனைவர் சரோஜினி மகிசி அறிக்கையை கர்நாடகத்தில் செயல்படுத்த வலியுறுத்தி வருகின்றன.[10][11]
மகிசி தலைமையிலான குழுவில் இந்திய நிர்வாக ஆட்சிப் பணியின் (ஐஏஎஸ்) நான்கு ஓய்வுபெற்ற அதிகாரிகள் அடங்குவர்.[12] உறுப்பினர்கள் கவிஞர் கோபாலகிருஷ்ண அடிகா, ஜி. கே. சத்யா, கே. பிரபாகர ரெட்டி, ஜி. நாராயண குமார், ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஓய்வுபெற்ற இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகள் பிஎஸ் ஹனுமான் மற்றும் சித்தய்யா பூரணிக் ஆகியோர் இருந்தனர்.
இறப்பு[தொகு]
மகிசி 25 ஜனவரி 2015 அன்று உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள தனது இல்லத்தில் இறந்தார். தில்லியின் லோதி சாலையில் உள்ள ஒரு சுடுகாட்டில் இவரது உடல் எரிக்கப்பட்டது. மேலும் இவரது இறுதி சடங்குகளை இவரது சகோதரர் பிபி மகிசி செய்தார்.[13]
சான்றுகள்[தொகு]
- ↑ . 26 January 2015.
- ↑ "Ex-Union Minister Sarojini Mahishi Passes Away". newindianexpress.com. 26 January 2015. http://www.newindianexpress.com/states/karnataka/Ex-Union-Minister-Sarojini-Mahishi-Passes-Away/2015/01/26/article2637280.ece.
- ↑ "Mahishi had advocated job quota for Kannadigas". 26 January 2015. http://www.deccanherald.com/content/455733/mahishi-had-advocated-job-quota.html.
- ↑ 4.0 4.1 "Mahishi, a multilingual scholar and educationist". 26 January 2015. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/mahishi-a-multilingual-scholar-and-educationist/article6822451.ece.
- ↑ "India Parliament". Guide2womenleaders.com. http://www.guide2womenleaders.com/India_Parliament.htm.
- ↑ "Members Of Lok Sabha". Parliamentofindia.nic.in. http://www.parliamentofindia.nic.in/ls/comb/combexpr.htm.
- ↑ "6th Lok Sabha Members Bioprofile - MAHISHI, DR. SAROJINI". Lok Sabha Secretariat, New Delhi. http://164.100.47.194/loksabha/writereaddata/biodata_1_12/1537.htm.
- ↑ "Karnataka / Bangalore News : Modification of Sarojini Mahishi report sought". 2009-07-08. http://www.hindu.com/2009/07/08/stories/2009070853790400.htm.
- ↑ "Sarojini Mahishi Committee". Outlookindia.com. 1997-03-12. http://www.outlookindia.com/article.aspx?203180.
- ↑ The Hindu Business Line: Pro-Kannada activists demand more jobs for locals in IT sector பரணிடப்பட்டது 25 சனவரி 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "`Rasta roko' hits vehicle movement". 2007-04-17. http://www.hindu.com/2007/04/17/stories/2007041708450500.htm.
- ↑ "Sarojini Mahishi stands by committee report". The Hindu. 23 February 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/sarojini-mahishi-stands-by-committee-report/article3182333.ece. பார்த்த நாள்: 9 July 2013.
- ↑ . 27 January 2015.