உள்ளடக்கத்துக்குச் செல்

சரோஜினி சாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரோயினி சாகு
Sarojini Sahoo
சரோயினி சாகு
சரோயினி சாகு
பிறப்பு4 சனவரி 1956 (1956-01-04) (அகவை 68)
தேங்கானல், ஒடிசா, இந்தியா
தொழில்
  • நாவல், சிறுகதை ஆசிரியர், கல்வியாளர், கவிஞர்
தேசியம்இந்தியர்

சரோஜினி சாகு (Sarojini Sahoo பிறப்பு 4 ஜனவரி 1956) ஓர் இந்தியப் பெண்ணிய எழுத்தாளர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு கட்டுரையாளர் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆங்கில இதழான இந்தியன் ஏஜிஇயின் இணை ஆசிரியர் ஆவார்.[1][2] கொல்கத்தாவின் கின்டெல் இதழால் இந்தியாவின் 25 விதிவிலக்கான பெண்கள் பட்டியலில் இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.[3] மற்றும் ஒடிசா சாகித்ய அகாதமி விருது வென்றவர்.[4]

வாழ்க்கை

[தொகு]

ஒடிசாவின் (இந்தியா) தேன்கனல் என்ற சிறிய நகரத்தில் பிறந்த சாகு , ஓடியா இலக்கியத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களையும், உத்கல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் பட்டமும் பெற்றார். இவர் ஒடிசா, சர்சுகுதா, பெல்பகாரில் உள்ள கல்லூரியில் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகிறார்.

இவர் ஈஸ்வர் சந்திர சாகு மற்றும் மறைந்த நளினி தேவியின் இரண்டாவது மகள் ஆவார். இவர் ஒடிசாவின் மூத்த எழுத்தாளர் ஜெகதீசு மொகந்தியை மணந்தார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.[5]

புனைவுகள்

[தொகு]
தெ டார்க் அபோட் அட்டைப் படம்

இவரது புதினமான கம்பிரி காரா ஒடியா இலக்கியத்தில் அதிகம் விற்பனையான புதினம் ஆகும்.[6] இவரது புதினங்களில் இருந்த இவரின் பெண்ணியக் கண்ணோட்டம் மற்றும் வெளிப்படையான பாலியல் தன்மைக்காகப் பரவலான கவனத்தைப் பெற்றது.[7] மேலும் இந்தப் புதினமானது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியாவில் இருந்து தி டார்க் அபோட் என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.(பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-906956-2-6 ) மற்றும் வங்காள மொழியில் மித்யா சியோசுதலி எனும் பெயரில் 2007 ஆம் ஆண்டில் வெளியானது. பிரமீலா கேபி இந்த புதினத்தினை மலையாளத்தில் மொழிபெயர்த்து திருவனந்தபுரத்தில் சிந்தா பதிப்பகத்தால் "இருண்ட கூடாரம்" என்ற பெயரில் வெளியிட்டார். இடாய்ச்சு மொழியில் மார்டினா ஃபுசும் மற்றும் இந்தி மொழியில் தினேஷ் குமார் மாலியும் மொழிபெயர்த்தனர். மற்றொரு புதினமான பகீபாஸ் வங்காளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அதே தலைப்பில் பங்களாதேசத்திலிருந்து 2009 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த புதினத்தினை தினேஷ் குமார் மாலி இந்தியில் மொழிபெயர்த்தார், அதே தலைப்பில் யசு பதிப்பகம், தில்லியில் 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89537-45-8 ) மேலும், தினேஷ்குமார் மாலி இந்தியில் இரண்டு புதினங்களை மொழிபெயர்த்தார்.

கட்டுரைகள்

[தொகு]

மேற்கத்திய உணர்வோடு பெண்ணியத்தை மறுவரையறை செய்யும் சென்சிபிள் சென்சுயாலிட்டி (2010),[8] என்ற தலைப்பில் கட்டுரைகளின் தொகுப்பை இவர் வெளியிட்டுள்ளார். இவர் பெண்ணியம் என்பது தனிநபர்களாக ஆண்களுக்கு எதிராக செயல்படக்கூடாது என்று நினைக்கிறார். இவரைப் பொறுத்தவரை, பெண்ணியம் என்பது அடக்குமுறை மற்றும் காலாவதியான சமூக கட்டமைப்புகளுக்கு எதிரானது, இது ஆண்களையும் பெண்களையும் பொய்யான மற்றும் விரோதமான நிலைகளுக்குள் தள்ளுகிறது என்று கருதினார். எனவே, பெண்ணிய இயக்கத்தில் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. பெண்ணியம் ஆணுக்கு எதிரானதாக வகைப்படுத்தப்படுவது முரண்பாடாகத் தோன்றுகிறது, உண்மையில், ஆண்கள் பெரும்பாலும் உணர்வுகளை அடக்குவது, ஆக்ரோஷமாக செயல்படுவது மற்றும் குழந்தைகளுடனான தொடர்பை இழப்பது போன்ற ஒரே போன்ற பாத்திரங்களிலிருந்து ஆண்களை விடுவிக்க முயல்கிறது. . [9]

ஓர் இந்திய பெண்ணியவாதியாக, சரோஜினி சாகு வின் பல படைப்புகள் பெண் பாலியல், பெண்களின் உணர்வுபூர்வமான வாழ்க்கை மற்றும் மனித உறவுகளின் சிக்கலான கட்டமைப்பைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகின்றன, பெண்களின் உள் அனுபவங்கள் மற்றும் இவர்களின் வளர்ந்து வரும் பாலியல் எப்படி பாரம்பரியத்திற்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது என்பதை விளக்குகிறது.

சான்றுகள்

[தொகு]
  1. Oriya Nari . Accessed 7 November 2010
  2. Express Buzz[தொடர்பிழந்த இணைப்பு]. Accessed 7 November 2010
  3. Orissa Diary பரணிடப்பட்டது 2010-03-27 at the வந்தவழி இயந்திரம். Accessed 8 April 2010
  4. Orissa Sahitya Akademy பரணிடப்பட்டது 2012-04-10 at the வந்தவழி இயந்திரம். Accessed 7 November 2010
  5. Official web site பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம். Accessed 11 August 2007
  6. Books: Oriya Nari. Accessed 7 November 2010
  7. "Accessed 04 August 2010" (PDF). பார்க்கப்பட்ட நாள் 1 December 2011.
  8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7273-541-8 published by Authors Press, E-35/103, Jawahar Park, Laxmi Nagar, Delhi- 110 092
  9. Note by publisher of Sensible Sensuality, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7273-541-8, Accessed 3 September 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜினி_சாகு&oldid=3944401" இலிருந்து மீள்விக்கப்பட்டது