சரோஜா ராமாமிருதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சரோஜா ராமாமிருதம்
பாலயோகினி திரைப்படத்தில் பேபி சரோஜா
பிறப்பு பேபி சரோஜா
1931
சென்னை
தமிழ் நாடு
இந்தியா
இருப்பிடம் சென்னை
தேசியம்  இந்தியா
பணி நடிகை
செயல்பட்ட ஆண்டுகள் 1937 முதல் 1941 வரை
சமயம் இந்து
வாழ்க்கைத் துணை வி. ராமாமிருதம்
பிள்ளைகள் இரண்டு மகன்
ஒரு மகள்

சரோஜா ராமாமிருதம் (பிறப்பு: 1931) என்பவர் பேபி சரோஜா என்னும் பெயரில் 1930களில் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் நடித்தவர். இவர் பாலயோகினி (1937), தியாகபூமி (1939), காமதேனு (1941) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

பிரபல திரைப்பட இயக்குனர் கே. சுப்பிரமணியத்தின் சகோதரர் கே. விசுவநாதன், மற்றும் வத்சலா ஆகியோருக்குப் பிறந்தவர் சரோஜா. தந்தை விசுவநாதன் சென்னையில் சித்திரா டாக்கீசு என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். பேபி சரோஜா நடித்த மூன்று திரைப்படங்களையும் கே. சுப்பிரமணியமே தயாரித்திருந்தார். காமதேனு திரைப்படத்தில் சரோஜாவின் தந்தையும் (கே. பி. வத்சல்), தாயும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.[2] அக்காலக்கட்டத்தில் கலிபோர்னியா மாநிலம் சாந்தா மொனிக்காவைச் சேர்ந்த ஷெர்லி டெம்பிள் என்ற குழந்தை நட்சத்திரம், பிரமாதமான நடிப்பால் உலகப் புகழ் பெற்றிருந்தார். அதே சமயம் இந்தியாவில் சரோஜா அவர்கள் தன் நடிப்புத் திரமையைக் கொண்டு எல்லோராலும் பாராட்டப் பட்டு இந்தியாவின் ஷிர்லி டெம்பிள் என்று மக்களால் போற்றப்பட்டார். மேலும் அப்போது தமிழ்நாட்டில் பிறந்த சில பெண் குழந்தைகளுக்குப் ”சரோஜ” என்று பெயர் சூட்டினார்கள்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MEMORIES OF MADRAS Beachside story". தி இந்து (ஏப்ரல் 29, 2009). பார்த்த நாள் மார்ச் 13, 2013.
  2. Kamadhenu 1941, ராண்டார் கை, தி இந்து, செப்டம்பர் 23, 2012
  3. "திரைப்படத் துறையில் கே.சுப்பிரமணியம் நடத்திய புரட்சி!". மாலை மலர் (பிப்ரவரி 16, 2013). பார்த்த நாள் மார்ச் 14, 2013.

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜா_ராமாமிருதம்&oldid=2216685" இருந்து மீள்விக்கப்பட்டது