சரோஜா பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமுதாய பிரச்சனைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் தங்கள் படைப்புகள் மூலம் எடுத்துக் கூறும் படைப்பாளர்களுள் ஒருவர்.

Contents[தொகு]

பிறப்பு:  [edit][தொகு]

1932 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் ஆறாம் நாள் விருதுநகரில் பிறந்தவர். பெற்றோர் துரைராஜ பாண்டியன் - சீனியம்மாள்.

கல்வித்தகுதி:[edit][தொகு]

திருமணத்திற்கு முன் எஸ்.எஸ்.எல்.சி.யும் இந்தியில் நான்கு தேர்வுகளும் தேறினார். திருமணத்திற்குப் பின் இந்தியில் மேலும் இரு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சென்னையில் உள்ள தென்னிந்திய இந்தி பிரச்சார் சபையில் பிரச்சார் பயிற்சி பெற்றார். பின் பி.யூ.சியும் சென்னை பல்கலைக் கழகத்தில் இந்தியில் இளங்கலை பட்டமும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலை பட்டமும் பணி ஓய்வு பெற்ற பின் காந்திய சிந்தனையில் முதுகலை பட்டமும் பெற்றார். தன் 70-வது வயதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காந்திய சிந்தனையில் இளம் முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்:[edit][தொகு]

1947-ல் விருதுநகர் பத்திரப் பதிவுத்துறையில் ஆறுமாதம் பணிபுரிந்தார். விருதுநகர் சத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாண்டுகள் இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இடைநிலை ஆசிரியராக பத்தாண்டுகளும் தமிழாசிரியராக பத்தாண்டுகளும் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

படைப்புகள்: [edit][தொகு]

சிறுகதைகள்

ஒரு தொடர்கதை முற்றுப் பெறுகிறது (1997-ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையினரால் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படும் சிறந்த சிறுகதைக்கான விருதில் 3-ம் இடம் பெற்றது.)

டிசம்பர் 6 (1999)

நான் சீதை இல்லை (1999)

குறுநாவல்:

ஊரான் பிள்ளை (1998)

நாவல்:

அழியாத கோபுரங்கள் (2000)

துணை தேடும் சுமைதாங்கிகள் (2000)

படைப்பு நோக்கம்:[edit][தொகு]

1. பெண்கள் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்தல்

2. பொதுவான சமுதாய பிரச்சனைகளுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் உணர்த்துதல்

3. இந்தியப் பண்பாட்டை வலியுறுத்துதல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜா_பாண்டியன்&oldid=2341955" இருந்து மீள்விக்கப்பட்டது