சரீஃபா அமீது அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரீஃபா அமீது அலி
பிறப்பு1883 (1883)
வதோதரா, குசராத்து, இந்தியா
இறப்பு1971 (அகவை 87–88)
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்சரீஃபா அமீது அலி, அமீது அலி
அமைப்பு(கள்)அனைத்திந்திய பெண்கள் மாநாடு
வாழ்க்கைத்
துணை
அமீது அலி

சரீஃபா அமீது அலி (Shareefa Hamid Ali. 1883 - 1971), [1] பேகம் அமீது அலி என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்தியப் பெண்ணியவாதி, தேசியவாதி, வழக்கறிஞர் மற்றும் அரசியல் பிரமுகர் ஆவார். இவர் 1935 இல் அகில இந்திய மகளிர் மாநாட்டின் தலைவராக இருந்தார் [1], மற்றும் 1947 இல் பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார் [2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1909 இல் பரோடா மாநிலம்

பேகம் ஷரீஃபா அமீது அலி காலனித்துவ பிரித்தானிய இந்தியாவின் நிர்வாக மையமான குஜராத்தின் பரோடாவில் (இப்போது வதோதரா என்று அழைக்கப்படுகிறது) ஒரு முற்போக்கு முஸ்லீம் குடும்பத்தில் டிசம்பர் 12, 1883 இல் பிறந்தார். இவர் இந்திய செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமான பத்ருதீன் தியாப்ஜியின் மருமகன் அமீனா தியாப்ஜி மற்றும் அப்பாஸ் ஜே. தியாப்ஜி ஆகியோரின் மகள் ஆவார். [3] இவரது தந்தை, அப்பாஸ் ஜே. தியாப்ஜி, பரோடா மாநிலத்தின் தலைமை நீதிபதியாகவும், மகாத்மா காந்தியின் சீடராகவும் இருந்தார் . [1] இவரது தாயார் அமீனா பர்தாவை மறுத்த முதல் முக்கியமான முஸ்லிம் பெண்களில் ஒருவர் ஆவார் . [1] அலி தனது தாயினைப் பின்பற்றி, இந்த கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கு எதிரான இயக்கத்தை ஆதரித்தார், ஏனெனில் அது சமூகப் பிரிவு மற்றும் பாலின ஒடுக்குமுறையின் அடையாளமாக இவர் கருதினார். [4] உண்மையில், இவரது பெற்றோர்கள் இவருக்கும் இவருடைய சகோதரிகளுக்கும் பர்தா கட்டுப்பாடுகளை மீறி பள்ளிக்கு அனுப்புவதன் மூலம் ஆதரவளித்தனர். பேகம் அமீது அலி உருது, குஜராத்தி, பாரசீக, மராத்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய ஆறு மொழிகளைப் பேசக் கற்றுக்கொண்டார். இவர் ஓவியம் வரைதல் மற்றும் இசைக்காக தனது நேரத்தை ஒதுக்கினார். [5] இருபத்தைந்து வயதில் இவள் உறவினர் மற்றும் இந்திய குடிமைப்பணி அதிகாரி அமீது அலியை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு, இவர்கள் இந்தியாவில் மும்பை மாகாணத்திற்கு குடிபெயர்ந்தனர். இவர் சமூகப் பணிகளில் ஈடுபட்டார் மற்றும் தொடர்ந்து தனது திறன்களை வளர்த்துக் கொண்டார். [3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

1907 ஆம் ஆண்டில், அலி இந்திய தேசிய காங்கிரசின் ஒரு அமர்வில் கலந்து கொண்டார், இது சுதேசி இயக்கம் மற்றும் தலித்களின் சமூகத்தில் ஆதரவு மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள காரணமாக அமைந்தது. இவர் கிராமங்களில் பணியாற்றினார். மேலும் கிராமங்களில் செவிலி மையங்கள் மற்றும் பெண்களுகான கற்றல் வகுப்புகளைத் தொடங்கவும் இவர் உதவினார். இவரது மிகவும் பரவலான சாதனைகளில் ஒன்று, சர்தா சட்டத்தை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தது ஆகும், இது 28 செப்டம்பர் 1929 அன்று நிறைவேற்றப்பட்ட குழந்தை திருமண தடை சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இவர் சிந்துவில் உள்ள முஸ்லீம் பெண்களிடம் உரையாற்றினார் மற்றும் இவர்களின் ஆதரவைப் பெற தனது சொந்த அனுபவத்தின் உதாரணத்தைப் பயன்படுத்தினார். இதன் காரணமாக, திருமணத்திற்கு சட்டப்பூர்வ வயது பதினெட்டு இருக்க வேண்டும் என்று இவள் நம்பியதால், இவர்கள் கல்வியும் முதிர்ச்சியும் அடையும் வரை இவர்களின் திருமணங்களை ஒத்திவைக்க முடிவு செய்தார்.

1934 ஆம் ஆண்டில் அகில இந்திய மகளிர் மாநாட்டை இஸ்தான்புல் மகளிர் சர்வதேச கூட்டமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தினார், 1937 இல் செக்கோஸ்லோவாக்கியாவின் லோகஹோவிஸில் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச லீக் காங்கிரசில் பங்கேற்றார்.[6]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Wayne, Tiffany K.. Feminist Writings from Ancient Times to the Modern World: A Global Sourcebook and HIstory. 
  2. Wayne, Tiffany K.. Feminist Writings from Ancient Times to the Modern World: A Global Sourcebook and History. 
  3. 3.0 3.1 Forbes, Geraldine (1998). Women in Modern India. https://archive.org/details/womeninmodernind0000forb_o2w5. 
  4. Woodsmall, Ruth Frances. Women in the Changing Islamic System. 
  5. Srivastava, Gouri. The Legend Makers: Some Eminent Women of India. 
  6. Srivastava, Gouri (2003). The Legend Makers: Some Eminent Women of India. New Delhi: Concept Pub. Co.. பக். 101. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரீஃபா_அமீது_அலி&oldid=3582118" இலிருந்து மீள்விக்கப்பட்டது