உள்ளடக்கத்துக்குச் செல்

சரித்திரா சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரித்திரா சந்திரன்
Charithra Chandran
பிறப்புசரித்திரா சூரியா சந்திரன்
17 சனவரி 1997 (1997-01-17) (அகவை 29)
பெர்த், இசுக்கொட்லாந்து
கல்விஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (இளங்கலை)
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2020–இன்று

சரித்திரா சந்திரன் (Charithra Chandran;[1][2] பிறப்பு: 17 சனவரி 1997) ஒரு பிரித்தானிய நடிகை ஆவார். தொலைக்காட்சியில், இவர் அமேசான் உளவுத் திகில் தொடர் அலெக்ஸ் ரைடர் (2021), நெற்ஃபிளிக்சு தொடர்களான பிரிட்ஜெர்ட்டன் (2022), ஒன் பீஸ் (2026) ஆகியவற்றில் நடித்ததற்காக அறியப்படுகிறார். இவரது திரைப்படங்களில் ஹவ் டு டேட் பில்லி வால்ஷ் (2024), பைட் அல்லது பிளைட் (2025) ஆகியவை அடங்கும்.

தொடக்க வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

சரித்திரா இசுக்கொட்லாந்து, பெர்த் நகரில் பிறந்தார்.[3] இவரது பெற்றோர் இந்தியத் தமிழ் மருத்துவர்கள் ஆவர். இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது பெற்றோர் பிரிந்ததை அடுத்து, தனது தந்தையுடன் இந்தியாவுக்குச் சென்றார், அங்கு அவர் தமிழ்நாட்டில் தனது தாத்தா பாட்டியுடன் தங்கினார். நான்கு வயதில் இங்கிலாந்துக்குத் திரும்பிய அவர், இங்கிலாந்தின் லிவர்பூலில் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். பின்னர் ஆறு முதல் பதினொரு வயது வரை இங்கிலாந்து, சஃபோக்கில் உள்ள மோர்ட்டன் ஹால் பள்ளியில் தங்கிப் படித்தார். அதன் பிறகு, அவரது தந்தை வேல்சில் வசித்தபோது, ​​ஆக்சுபோர்டில் தனது தாயுடன் குடியேறினார்.[4][5]

சரித்திரா ஆக்சுபோர்டு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவத்தை முடித்தார். பின்னர் 2019 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் நியூ கல்லூரியில் மெய்யியல், அரசியல், பொருளியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது சரித்திரா பல நாடகங்களில் பங்கேற்றார், தேசிய இளைஞர் நாடகக் குழுவில் சேர்ந்தார்.[6][7] பின்னர் அவர் நியூ பாலிசி நிறுவனத்தில் பகுதி நேரமாகப் பணியாற்றினார், அந்த நேரத்தில் அவர் நாடகத்தை ஒரு பொழுதுபோக்காகச் செய்தார், பின்னர் அதைத் தனது தொழிலாக மாற்ற முடிவு செய்தார்.[8]

பணி

[தொகு]

2021-இல், சரித்ரா ஐஎம்டிபி தொலைக்காட்சியில் வெளியான 'அலெக்ஸ் ரைடர்' என்ற உளவுத் திகில் தொடரின் இரண்டாவது பருவத்தில் சபீனா பிளீசன்சு என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.[9][10] 2022-இல், சோண்டாலாண்ட் தயாரித்த நெற்ஃபிளிக்சு நாடகத் தொடரான ​​'பிரிட்ஜெர்ட்டன்'-இன் இரண்டாவது பருவத்தில், ஜொனத்தன் பெய்லி, சிமோன் ஆசுலி ஆகியோருடன் இணைந்து எட்வீனா என்ற பாத்திரத்தில் நடித்தார்.[11][12][13][14]

சூன் 2022-ல், சரித்திரா, அலெக்சாண்டர் டுமாசு பில்சின் 'கமேலியாவின் பெண்மணி' என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்ட பாம் ஜெம்ஸின் 'கேமில்' என்ற மேடை நாடகத்தின் ஒலித் தழுவலில், பிபிசி வானொலி 3-இற்காக விலைமகள் 'கேமில் பாத்திரத்திற்குக் குரல் கொடுத்தார்.[15] இந்தத் தயாரிப்பு 2023 பிபிசி குரல் நாடக விருதுகளில், சிறந்த தழுவலுக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது.[16]

2024-இல், ரோஸி டே தயாரித்த 'பதின்மப்பருவ ஆர்மகெடானுக்கான வழிமுறைகள்' நாடகத்தில் ஐலீன் பாத்திரத்தில் நடித்து வெசுட் எண்ட் நாடகக்குழுவில் அறிமுகமானார். அதே ஆண்டில், அமேசான் பிரைம் நகைச்சுவைத் திரைப்படமான 'ஹவ் டு டேட் பில்லி வால்ஷ்'-இல் அமேலியாவாக நடித்தார்.[17]

நடிப்பு

[தொகு]

திரைப்படம்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள் மேற்.
2021 எட்டெர்னல்சு பாலிவுட் நடனக் கலைஞர்
2022 தி டலெண்ட்சு பெக்கி குறுந்திரைப்படம்
கிளாசு S செரி
2024 ஹவ் டு டேட் பில்லி வால்ஷ் அமேலியா பிரவுன்
மாயா: ஒரு சூப்பர் ஹீரோவின் பிறப்பு பதின்ம மாயா குறுந்திரைப்படம்
2025 பைட் ஓர் பிளைட் ஈசா மண்டல் [18]
கிறித்துமசு கர்மா பியா பெர்னாண்டசு

தொலைக்க்காட்சி

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள் மேற்.
2021 அலெக்சு ரைடர் சபீனா பிளெசர் முக்கிய பாத்திரம் (பருவம் 2)
2022 பிரிட்ஜெர்ட்டன் எட்வீனா சர்மா முக்கிய பாத்திரம் (பருவம் 2)
2023 ஸ்டார் வார்ஸ்: வ்பிசன்சு "அன்னி" கால்ஃபுசு குரல்
2024 டூன்: புரொபெசி இளம் பிரான்செசுக்கா தொடர்ச்சியான பாத்திரம் [19]
2026–இன்று ஓன் பீசு நெஃபர்ட்டாரி வீவி / மிஸ் வெட்னிசுடே முக்கிய பாத்திரம் (பரு. 2–3) [20]
அறிவிக்கப்பட உள்ளது பில்லோ டோக் இசுடெல்லா முக்கிய பாத்திரம், வலைத்தொடர்
சாங் ஆஃப் தி சன் காட் லீலா முக்கிய பாத்திரம்; துணைத் தயாரிப்பாளர் [21]
அர்சூ அர்சூ தலைமைப் பாத்திரம்

ஒலி

[தொகு]
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள் மேற்.
2022 மீட் கியூட் மியா வலையொலித் தொடர்; 6 தொடர்கள்
காமில் காமில் பிபிசி வானொலி 3 [22]
ஓர் இடைப்பருவ இரவுக் கனவு மியா வலையொலித் தொடர் [23]
2025 த டெத் அண்ட் லைஃப் ஒஃப் ரிவர் சோங்
தொடர் 03
ஆன் போலின் ஒலி நாடகம் [24]

இசைக் காணொலித் தோற்றங்கள்

[தொகு]
ஆண்டு தலைப்பு நடிகர்கள் மேற்.
2023 "மொஸ்கிட்டோ" பிங்க்பாந்தெரெசு [25]

நாடக அரங்கு

[தொகு]
ஆண்டு தலைப்பு பாத்திரம் இயக்கம் அரங்கு குறிப்புகள் மேற்.
2024 பதின்மவயது ஆர்மகெடானுக்கான அறிவுறுத்தல்கள் பெண் கியார்ஜி இசுடெயிட் காரிக் தியேட்டர் [26]

விருதுகளும் பரிந்துரைகளும்

[தொகு]
ஆண்டு விருது பிரிவு படைப்பு முடிவு மேற்கோள்கள்
2022 தேசிய தொலைக்காட்சி விருதுகள் வளர்ந்து வரும் நட்சத்திரம் பிரிட்ஜெர்ட்டன் பரிந்துரை [27]
கிளாமர் விருதுகள் வெற்றி [28]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "The Cast of Bridgerton Guess Regency Trivia". BuzzFeed UK. 28 March 2022. Archived from the original on 11 October 2022. Retrieved 18 May 2022.
  2. ↑ "Bridgerton's Charithra Chandran's Guide to a Foolproof Night-Out Look | Beauty Secrets". Vogue. 30 March 2022. Archived from the original on 31 July 2024. Retrieved 18 May 2022.
  3. ↑ Wickes, Jade (4 January 2022). "Charithra Chandran on entering the world of Bridgerton". The Face. https://theface.com/culture/charithra-chandran-bridgerton-netflix-interview. பார்த்த நாள்: 7 January 2022.
  4. ↑ Bailey, Sarah (19 March 2022). "Charithra Chandran: 'Friends have said I only got the Bridgerton role because I'm brown – that hurts". The Telegraph. https://www.telegraph.co.uk/tv/2022/03/19/charithra-chandran-friends-have-said-got-bridgerton-role-brown/. பார்த்த நாள்: 25 March 2022.(subscription required)
  5. ↑ Taylor, Kelly-Anne (20 March 2022). "Charithra Chandran: 'No one would think there would be two Indian women playing period drama leads'". Radio Times. https://www.radiotimes.com/tv/drama/bridgerton-season-2-cast-big-rt-interview/. பார்த்த நாள்: 20 March 2022.
  6. ↑ Fearn, Rebecca (8 April 2021). "Everything You Need To Know About Bridgerton S2 Star Charithra Chandran". Bustle. https://www.bustle.com/entertainment/who-is-charithra-chandran. பார்த்த நாள்: 21 May 2021.
  7. ↑ "Charithra Chandran". Jonathan Arun Group. Archived from the original on 25 March 2022. Retrieved 22 February 2022.
  8. ↑ "Team: Charithra Chandran". New Policy Institute. Archived from the original on 25 March 2022. Retrieved 2 April 2021.
  9. ↑ Lang, Jamie (1 February 2021). "'Alex Rider' Season 2 Casting Details Announced – Global Bulletin". Variety. Archived from the original on 27 March 2022. Retrieved 7 February 2021.
  10. ↑ Ahluwalia, Navi (22 December 2021). "Charithra Chandran Opens Up About Her First Professional TV Role, in Amazon's Alex Rider". Popsugar. https://www.popsugar.co.uk/entertainment/charithra-chandran-alex-rider-bridgerton-interview-48656704. பார்த்த நாள்: 7 January 2022.
  11. ↑ Nordstrom, Leigh (2022-04-07). "Charithra Chandran on Her Bridgerton 'Carnival of Joy'". WWD (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2 May 2022. Retrieved 2022-05-02.
  12. ↑ Andreeva, Nellie (April 1, 2021). "'Bridgerton': Charithra Chandran To Play Edwina, Rupert Young Also Cast In Season 2 Of Netflix Series". Deadline. https://deadline.com/2021/04/bridgerton-charithra-chandran-cast-edwina-rupert-young-jack-season-2-netflix-shondaland-1234726344/. பார்த்த நாள்: 2 April 2021.
  13. ↑ Harvey, Olivia (2 April 2021). "The 'Bridgerton' Season 2 Cast Just Added Another Leading Lady". Hello Giggles. Archived from the original on 11 October 2022. Retrieved 3 April 2021.
  14. ↑ Newbold, Alice (1 March 2022). "At the Dior Show With Bridgerton's New Heroine". Vogue. https://www.vogue.com/article/charithra-chandran-dior-fall-2022. பார்த்த நாள்: 9 March 2022.
  15. ↑ Camille - Drama on 3 பரணிடப்பட்டது 30 சூன் 2024 at the வந்தவழி இயந்திரம் BBC Radio 3
  16. ↑ "BBC Audio Drama Awards 2023". Archived from the original on 12 March 2023. Retrieved 21 December 2022.
  17. ↑ Ramachandran, Naman (2024-02-26). "'Bridgerton' Star Charithra Chandran to Produce Reality Show Based on the 'Kama Sutra' (EXCLUSIVE)". Variety (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 13 July 2024. Retrieved 2024-03-22.
  18. ↑ Omotade, Lade (2024-12-11). "Josh Hartnett's Hair Is Making a Statement in First 'Fight or Flight' Images". Collider (in ஆங்கிலம்). Archived from the original on 5 February 2025. Retrieved 2025-01-10.
  19. ↑ "Dune Prophecy First Look Pic: Charithra Chandran Plays Young Tabu In Sci-Fi Prequel Series". Times Now (in ஆங்கிலம்). 2024-10-02. Archived from the original on 2 October 2024. Retrieved 2024-10-03.
  20. ↑ Otterson, Joe (2024-08-23). "'One Piece' Season 2 Casts 'Bridgerton' Actress Charithra Chandran as Miss Wednesday". Variety (magazine). Archived from the original on 28 August 2024. Retrieved 2024-08-23.
  21. ↑ Goldbart, Max (2022-09-29). "'Bridgerton' Star Charithra Chandran To Lead Olivia Hetreed Drama 'Song Of The Sun God'". Deadline (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 26 April 2024. Retrieved 2022-09-30.
  22. ↑ "BBC Radio 3 - Drama on 3, Camille". BBC (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 30 June 2024. Retrieved 2022-06-27.
  23. ↑ White, Peter (2022-06-22). "'Bridgerton's Charithra Chandran To Star In Meet Cute's 'A Mid-Semester Night's Dream'". Deadline (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 12 October 2022. Retrieved 2022-06-27.
  24. ↑ "3. The Death and Life of River Song Series 03: The Dissolution of Time". Big Finish (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2025-08-15.
  25. ↑ Bell, Sadie (2023-09-29). "PinkPantheress Shops with Yara Shahidi, Charithra Chandran, India Amarteifio in Adorable 'Mosquito' Video". People. Archived from the original on 12 November 2023. Retrieved 2024-05-24.
  26. ↑ Wyver, Kate (2024-03-18). "Instructions for a Teenage Armageddon review – Bridgerton's Charithra Chandran glows and rages" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/stage/2024/mar/18/instructions-for-a-teenage-armageddon-review-garrick-theatre-london-charithra-chandran.
  27. ↑ Morris, Lauren (24 May 2022). "NTA 2022 longlist revealed as David Tennant and Sex Education nominated". Radio Times. Archived from the original on 24 May 2022. Retrieved 24 May 2022.
  28. ↑ Smith, Josh (2022-11-08). "Bridgerton's Charithra Chandran: 'I'm a proud Indian woman, but I'm also more than that'". Glamour UK (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 22 March 2024. Retrieved 2024-03-22.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரித்திரா_சந்திரன்&oldid=4522883" இலிருந்து மீள்விக்கப்பட்டது