உள்ளடக்கத்துக்குச் செல்

சரிதா பதாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரிதா பதாரியா
தலைவி, மகிளா பாலவிகாசு சன்யுக் சமிதி
பதவியில் உள்ளார்
பதவியில்
3 திசம்பர் 2019.[1][2]
சட்டமன்ற உறுப்பினர், 17ஆவது சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 மார்ச்சு 2017
முன்னையவர்இரகுராஜ சிங் காக்யா
தொகுதிஇட்டாவா
துணைத்தலைவர்-பாரதிய ஜனதா கட்சி (உ.பி.)
பதவியில்
2013–2016
துணைத்தலைவர், பாஜக மகளிர் அணி
பதவியில்
2010–2013
செயலாளர்-பாரதிய ஜனதா கட்சி (உ.பி.)
பதவியில்
2007–2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சனவரி 1963 ( 1963-01-04) (அகவை 62)
கிசினி, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி[1]
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அபய் வீர் சிங் பதாரியா
பிள்ளைகள்ரீனா சவுகான்

Ashish Bhadauria

Rohit Bhadauria
வாழிடம்உதி, இட்டாவா,
முன்னாள் மாணவர்சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம்
தொழில்சமூக சேவகர், அரசியல்வாதி

சரிதா பதாரியா (Sarita Bhadauria)(பிறப்பு 4 சனவரி 1963) உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் 18ஆவது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள எடாவா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர். இது முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இவர் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரை 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 17234 வாக்குகள் வித்தியாசத்திலும், 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 4277 வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்கடித்தார்.[1]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

1999ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரா எட்டாவா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இதன்பிறகு 2000ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்தார். மீண்டும் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எட்டாவா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆரம்பத்தில் இவர் ஒரு சமூக சேவகராக பொதுவில் பணியாற்றத் தொடங்கினார், ஆனால் விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 2007-ஆம் ஆண்டில் பாஜகவின் உத்தரப்பிரதேசப் பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2010-ஆம் ஆண்டில் இசுமிருதி இரானி தலைவராக இருந்தபோது பாஜக மகளிர் அணியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2013-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி உத்தரப்பிரதேசப் பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் பேத்தி பச்சாவோ பேத்தி பதாவோ அபியான் திட்டத்தின் உத்தரப்பிரதேசத் தலைவர் பதவியை வகிக்கிறார். 2017-ஆம் ஆண்டில் இவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக எடாவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தரப்பிரதேசச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் இவர் 91234 வாக்குகளைப் பெற்றார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சரிதாவின் கணவர் பெயர் அபய் வீர் சிங். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஆஷிசு சவுகான் என்ற மருத்துவரை மணந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Uttar Pradesh News (यूपी न्यूज़): Uttar Pradesh news in Hindi(उत्तर प्रदेश समाचार), Latest News in UP-Hindi News only on Dainik Bhaskar". Dainik Bhaskar.
  2. 2.0 2.1 ADR. "Sarita Bhadauriya(Bharatiya Janata Party(BJP)):Constituency- ETAWAH(ETAWAH) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 26 April 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிதா_பதாரியா&oldid=4384144" இலிருந்து மீள்விக்கப்பட்டது