சரிசாத் அப்துல் ஜாலீல்
சரிசாத் அப்துல் ஜாலீல் Shahrizat Abdul Jalil | |
|---|---|
சரிசாத் அப்துல் ஜாலீல் (2018) | |
| அமைச்சு பதவிகள் | |
| 1995–1999 | இளைஞர் விளையாட்டுத் துறை நாடாளுமன்றச் செயலர் |
| 1999–2001 | பிரதமர் துறை துணையமைச்சர் |
| 2001 | மகளிர் நலத்துறை அமைச்சர் |
| 2001–2004 | மகளிர் குடும்ப அமைச்சர் |
| 2004–2008 | மகளிர், குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர் |
| 2005–2006 | கூட்டரசு பிரதேசங்களின் இடைக்கால அமைச்சர் |
| 2009–2012 | மகளிர், குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர் |
| பிற பணிகள் | |
| 2008–2009 | மகளிர் சமூக நலன்களுக்கான பிரதமரின் சிறப்பு ஆலோசகர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 மே 1953 பினாங்கு, மலேசியா |
| குடியுரிமை | மலேசியர் |
| அரசியல் கட்சி | |
| பிற அரசியல் தொடர்புகள் | |
| துணைவர் | முகமது சாலே இசுமாயில் |
| பிள்ளைகள் | 3 |
| முன்னாள் மாணவர் | மலாயா பல்கலைக்கழகம் |
| பணி | அரசியல்வாதி |
| தொழில் | வழக்கறிஞர் |
டான் செரி டத்தோ செரி சரிசாத் அப்துல் ஜாலீல் (ஆங்கிலம்; மலாய்: Shahrizat Abdul Jalil; Shahrizat binti Abdul Jalil) (பிறப்பு: 15 ஆகத்து 1953) என்பவர் 2009 முதல் 2012 வரை மலேசிய அமைச்சரவையில், மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றிய மலேசிய அரசியல்வாதி ஆவார். அவர் 1995 முதல் 2008 வரை லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதனைத் தொடர்ந்து மலேசிய மேலவையில் மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.
இவர், அம்னோ எனும் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் (UMNO) மகளிர் பிரிவின் முன்னாள் தலைவி ஆவார். அதன் காரணமாக, ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் மகளிர் பிரிவின் தலைவியாகவும் அவர் பொறுப்பு வகித்தார். மேலும், அவர் மலேசியப் பிரதமரின் மகளிர் தொழில்முனைவு மற்றும் தொழில்முறை மேம்பாடு குறித்த ஆலோசகராகவும் பணியாற்றினார்..
வாழ்க்கை
[தொகு]சரிசாத் அப்துல் ஜாலீல், 1953 ஆம் ஆண்டு ஆகத்து 15-ஆம் தேதி பினாங்கில் பிறந்தார். அவர் கல்வி மற்றும் பாடத்திட்ட நடவடிக்கைகளில் ஒரு சுறுசுறுப்பான மாணவியாக விளங்கினார். அவர் தமது தொடக்கக்கல்வியைப் பினாங்கு நார்தாம் ரோடு பெண்கள் பள்ளி; மற்றும் மதரசா தர்பியா இசுலாமியாவில் (Madrasah Tarbiah Islamiah) பயின்றார். மேலும் தமது இடைநிலைக் கல்வியைச் செயின்ட் ஜார்ஜ் பெண்கள் பள்ளியில் பயின்றார். பின்னர் அவர் நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள துங்கு குர்சியா கல்லூரியில் தமது கல்வியைத் தொடர்ந்தார்.
அவர் மலாயா பல்கலைக்கழகச் சட்டப் பள்ளியில் சேர்ந்து, 1976-இல் சிறப்புத் தகுதியுடன் பட்டம் பெற்றார். பின்னர், மூன்று ஆண்டுகள் இடைக்கால நீதிபதியாகப் பணியாற்றினார். பின்னர் அவர் மலேசிய கருவூலத்தின் உதவி வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1980-இல் பொதுச் சேவைத் துறையை விட்டு ஒரு சட்ட நிறுவனத்தில் பங்குதாரராக மாறினார். சரிசாத் அப்துல் ஜாலீல், தமது சொந்த சட்ட நிறுவனமான தெதுவான் சாரிசாத் & தான் (Tetuan Shahrizat & Tan) நிறுவனத்தை 1 சூலை 1983-இல் தொடங்குவதற்கு முன்பு, சூ தெய்ன் மிங் & சாரிசாத் (Soo Thein Ming & Shahrizat) சட்ட நிறுவனத்தில் 16 ஆண்டுகள் வழக்கடிஞராகப் பணிபுரிந்தார்.[1]
அரசியல்
[தொகு]2001-இல் பிரதமர் மகாதீர் முகமதுவால் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு உருவாக்கப்பட்டபோது, சரிசாத் அப்துல் ஜாலீல் அதன் முதல் அமைச்சரானார். பின்னர், அப்துல்லா அகமது படாவி பிரதமரானபோது, அவர் அந்த அமைச்சைப் புதுப்பித்து, அதற்கு பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு எனப் பெயர் மாற்றம் செய்தார்.
அம்னோ மூத்த தலைவர்களில் ஒருவரான முகமது ஈசா அப்துல் சமத் ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. அதனைத் தொடர்ந்து சரிசாத் அப்துல் ஜாலீல், 16 அக்டோபர் 2005 முதல் 14 பெப்ரவரி 2006 வரை மலேசிய கூட்டரசு பிரதேசங்களுக்கான தற்காலிக அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
சரிசாத் அப்துல் ஜாலீல், 1995 முதல் 2008 வரை கோலாலம்பூரில் உள்ள லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்துள்ளார்.[2] 1999 மலேசியப் பொதுத் தேர்தலில், சைனூர் சகாரியா என்பவரிடம் சொற்ப வாக்கு வேறுபாட்டில் தோல்வி அடைந்தார். இருப்பினும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்ட பின்னர் சரிசாத் அப்துல் ஜாலீல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | மொத்த வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1995 | P109 லெம்பா பந்தாய் | சரிசாத் அப்துல் ஜாலீல் (அம்னோ) | 23,447 | 68.99% | சாலே அபாஸ் (S46) | 10,058 | 29.60% | 33,984 | 13,389 | 65.22% | ||
| 1999 | சரிசாத் அப்துல் ஜாலீல் (அம்னோ) | 18,726 | 51.65% | சைனூர் சக்காரியா (பிகேஆர்) | 17,272 | 47.64% | 36,256 | 1,454 | 68.91% | |||
| 2004 | P121 லெம்பா பந்தாய் | சரிசாத் அப்துல் ஜாலீல் (அம்னோ) | 26,474 | 69.75% | சனுசி ஒசுமான் (பிகேஆர்) | 11,186 | 29.47% | 37,958 | 15,288 | 67.11% | ||
| 2008 | சரிசாத் அப்துல் ஜாலீல் (அம்னோ) | 18,833 | 45.61% | நூருல் இசா அன்வார் (பிகேஆர்) | 21,728 | 52.62% | 41,289 | 2,895 | 72.88% | |||
| பெரியசாமி நாகரத்தினம் (சுயேச்சை) | 489 | 1.18% | ||||||||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shahrizat Abdul Jalil". Menteriku.blogspot.com. Retrieved 6 January 2015.
- ↑ New dimension to urban voting, The Star, March 2, 2008.
- ↑ "13th Malaysian General Election". The Star. http://thestar.com.my/election/. பார்த்த நாள்: 3 January 2010.
- ↑ "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri". Election Commission of Malaysia. Retrieved 6 June 2010. Percentage figures based on total turnout.
- ↑ "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. Retrieved 4 February 2017. Results only available from the 2004 Malaysian general election.